வீரத்திருத்தகை

வீரத்திருத்தகை (knight) நடுக்காலத்தில் ஐரோப்பாவில் தொழில்முறையான வலிய குதிரைப்படை போர்வீரரைக் குறிக்கும். இவர்கள் இராச்சியத்தின் மிகயுயர்ந்த போர்வீரர்களாக அதனை எத்தனை இடர் வந்தபோதும் காக்க உறுதி பூண்டவர்கள். வீரத்திருத்தகைகள் பிரபுக்கள் அல்லது அரச வம்சத்தினருக்கு பணி புரிந்தனர். இதற்கு மாறாக அரசர்கள் அவர்களுக்கு நிலத்தைக் கொடுப்பது வழக்கமாயிருந்தது. வீரத்திருத்தகையினர் தன்மானத்தை மிகவும் முக்கியமானதாகக் கருதினர். இவர்களது நடத்தை விதிகள் வீரப்பண்புமரபு (chivalry) எனப்பட்டது. காப்புக் கட்டுப்பாட்டுணர்வு, மாதர்-துணையிலார் மாட்டு ஆதரவுடைமை, பெருவீரம், இவற்றில் சிலவாம். அவர்களுக்கு சிறப்பான மேலங்கிச் சின்னமும் இருந்தது.[1][2][3]

மூன்றாம் எட்வர்டு தனது மகன் எட்வர்டுக்கு அக்குத்தைய்ன் வேள்புல அரசு வழங்குதல்
இசுக்காட்லாந்தின் முதலாம் டேவிட் விரத் திருத்தகையின் உதவியாளரை கௌரவித்தல்

மேற்கோள்கள்

தொகு
  1. Almarez, Felix D. (1999). Knight Without Armor: Carlos Eduardo Castañeda, 1896-1958. Texas A&M University Press. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781603447140.
  2. Diocese of Uyo. El-Felys Creations. 2000. p. 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789783565005.
  3. Paddock, David Edge & John Miles (1995). Arms & armor of the medieval knight : an illustrated history of weaponry in the Middle Ages (Reprinted. ed.). New York: Crescent Books. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-517-10319-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரத்திருத்தகை&oldid=4103474" இலிருந்து மீள்விக்கப்பட்டது