வீரமாங்குடி வஜ்ரகண்டீஸ்வரர் கோயில்

வீரமாங்குடி வஜ்ரகண்டீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு-கும்பகோணம் சாலையில் 8 கிமீ தொலைவில் உள்ள சோமேசுவரபுரத்திலிருந்து வடக்கே 3 கிமீ தொலைவில் உள்ளது. காவிரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடையே சோலைகள் நிறைந்த இடத்தில் இக்கோயில் உள்ளது.

இறைவன், இறைவி

தொகு

இங்குள்ள இறைவன் வஜ்ரகண்டீஸ்வரர், இறைவி மங்களாம்பிகை.[1]

பெயர்க்காரணம்

தொகு

வஜ்ரன் என்ற பெயருள்ள அரக்கன் மானுடர்களைத் தொல்லைபடுத்தியபோது, சிவன் அவனைஅழித்து மக்களைக் காத்ததால் வஜ்ரகண்டீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.[1]

அமைப்பு

தொகு

மூன்று நிலை ராஜகோபுரத்துடன் உள்ள இக்கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. மூலவர், அம்மன் சன்னதி மற்றும் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி, நவக்கிரகங்கள் சன்னதி உள்ளிட்ட பல சன்னதிகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்

தொகு