வீரை (சங்ககாலம்)

வீரை என்னும் ஊரில் உப்புக் காய்ச்சும் தொழில் நடைபெற்றது. வேளிர்குடிப் போராளிகள் இவ்வூரில் வாழ்ந்துவந்தனர். [1]

இவ்வூர் அரசன் வெளியன் தித்தன். இவன் உப்பளங்களில் பணியாற்றுவோருக்கு இரவில் உதவும் வகையில் மாலை நேரத்தில் முரசை அகலாகக் கொண்டு விளக்கேற்றி வைத்தான். [2]

வீரை [3] என்னும் சொல்லுக்கு வாழை என்னும் பொருள் உண்டு. இதன்படி பார்த்தால் இவ்வூரில் வாழைமரங்கள் மிகுதியாக இருந்திருக்கலாம்.

வீரை வெளியனார்,
வீரை வெளியன் தித்தனார்
ஆகிய சங்ககாலப் புலவர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.

அடிக்குறிப்பு

தொகு
  1. அடுபோர் வேளிர் வீரை முன்துறை நெடுவெள் உப்பின் நிரம்பாக் குப்பை பெரும்பெயர்க்கு உருகியாங்கு - அகம் 206
  2. வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கு - நற்றிணை 58
  3. வீரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரை_(சங்ககாலம்)&oldid=1926570" இலிருந்து மீள்விக்கப்பட்டது