வீர்மேன் தரங்குறைப்பு வினை

வீர்மேன் தரங்குறைப்பு வினை (Weerman degradation) கரிம வேதியியலில் ஒரு பெயர் வினையாக வகைப்படுத்தப்படுகிறது, இதை வீர்மேன் வினை என்ற பெயராலும் அழைக்கிறார்கள். ருடால்ப் அட்ரியன் வீர்மேன் 1910 ஆம் ஆண்டு இவ்வினையைக் கண்டறிந்தார் [1].பொதுவாக கார்போவைதரேட்டு வேதியியலில் வீர்மேன் தரங்குறைப்பு வினை இடம்பெறுகிறது. அமைடுகள் சோடியம் ஐப்போகுளோரைட்டால் தரங்குறைக்கப்பட்டு எண்ணிக்கையில் ஒரு கார்பன் குறைவான ஆல்டிகைடுகளாக உருவாக்கப்படுகின்றன [2] ஆப்மேன் மறுசீராக்கல் வினையின் நீட்சியாக சிலர் இவ்வினையைக் கருதுகிறார்கள். ம்ன்ம்ம்[3].

α-ஐதராக்சி-பதிலீடு செய்யப்பட்ட கார்பானிக் அமில அமைடுகள் தரங்குறைத்தல்

தொகு

α-ஐதராக்சி-பதிலீடு செய்யப்பட்ட கார்பானிக் அமில அமைடுகளில் வீர்மேன் தரங்குறைப்பு வினை நிகழ்கிறது. உதாரணம் : சர்க்கரை

பொதுவான வினைத்திட்டம்

தொகு

α-ஐதராக்சி-பதிலீடு செய்யப்பட்ட கார்பானிக் அமில அமைடுகளில் வீர்மேன் தரங்குறைப்பு வினை நிகழும் போது கார்பன் சங்கிலியில் ஒரு கார்பன் அணு குறைகிறது[2]

 
Weerman-Degradation

அறை வெப்ப நிலையில் இவ்வினை மிகவும் மெதுவாக நடைபெறுகிறது என்பதால் வினை கலவையை 60-65 ° செல்சியசு வெப்ப நிலைக்கு சூடுபடுத்த வேண்டும்.

வினைவழிமுறை

தொகு

வினை வழிமுறையானது ஆப்மான் தரங்குறைப்பு வினையுடன் தொடர்பு கொண்ட வினையாகும்.[2]

 
Weermann degradation mechanism of Hydroxy-Carbonsäureamide

முதலில் கார்பானிக் அமில அமைடு (1) சோடியம் ஐப்போகுளோரைட்டுடன் வினைபுரிகிறது. தண்ணீர் மற்றும் குளோரைடு ஆகியவை பிரிக்கப்பட்ட பின்னர் தளர்வு பிணைப்புடன் ஓர் அமீன் 2 கட்டமைக்கப்படுகிறது. மறுசீரமைப்பால் ஓர் இடைநிலை (3) உருவாகிறது. அடுத்த நிலையில் ஒரு நீராற்பகுப்பு வினை நிகழ்கிறது. எண்'1' என்று எண்ணிடப்பட்ட கார்பன் அணுவுடன் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. ஒரு ஐதராக்சிலிக் குழு உருவாக்கப்படுகிறது. கடைசி படிநிலையில் அமில அமைடு தனித்துப் பிரிக்கப்பட்டு ஒர் ஆல்டிகைடு உருவாகிறது.

α,β-நிறைவுறா கார்பானிக் அமில அமைடுகளின் தரங்குறைப்பு வினை

தொகு

கூடுதலாக வீர்மேன் தரங்குறைப்பு வினை α,β-நிறைவுறா கார்பானிக் அமில அமைடுகளுடன் நிகழ்த்தப்படுகிறது. உதாரணம் அக்ரைலமைடு.

பொதுவான வினைத்திட்டம்

தொகு

α-ஐதராக்சி-பதிலீடு செய்யப்பட்ட கார்பானிக் அமில அமைடுகளில் வீர்மேன் தரங்குறைப்பு வினை நிகழும் போது கார்பன் சங்கிலியில் ஒரு கார்பன் குறைவு தோன்றுகிறது [2]

 
Weermann degradation general unsattuered carbonic acid amides

அறை வெப்ப நிலையில் இவ்வினை மிகவும் மெதுவாக நடைபெறுகிறது என்பதால் வினை கலவையை 60-65 ° செல்சியசு வெப்ப நிலைக்கு சூடுபடுத்த வேண்டும்.

வினை வழிமுறை

தொகு

வினை வழிமுறையானது ஆப்மான் தரங்குறைப்பு வினையுடன் தொடர்பு கொண்ட வினையாகும்.[2]

 
Weermann degradation 1st unsattuered

முதலில் கார்பானிக் அமில அமைடு (1) சோடியம் ஐப்போகுளோரைட்டுடன் வினைபுரிகிறது. தண்ணீர் மற்றும் குளோரைடு ஆகியவை பிரிக்கப்பட்ட பின்னர் தளர்வு பிணைப்புடன் ஓர் அமீன் 2 கட்டமைக்கப்படுகிறது. மறுசீரமைப்பால் ஓர் இடைநிலை (3) உருவாகிறது. இந்நிலையில் இரண்டு வினைவழிமுறைகளுக்கு சாத்தியம் உள்ளது. மேற்கண்ட வினைவழி முறையில் இரண்டு மெத்தனால் மூலக்கூறுகள் இடைநிலையுடன் வினைபுரிகின்றன. இதனால் சேர்மம் (4) உருவாகிறது. இதன் பின்னர் கார்பனீராக்சைடு, தண்ணீர், அமோனியம், மெத்தனால் ஆகியன வெவ்வேறு படிநிலைகளில் பிரிகின்றன. குறைந்தபட்சமாக இது ஓர் ஆல்டிகைடாக புரோட்டானேற்றம் (5) அடைகிறது.

 
Weermann degradation 2nd unsattuered

இடைநிலை உருவாகும் வரை (3) வினை வழிமுறை மேற்கண்ட வழிமுறையையே ஒத்துள்ளது. அதன் பின்னரே ஒரு மெத்தனால் அணு ஒரு புரோட்டானேற்றத்துடன் சேர்க்கப்பட்டு (4) தண்ணீர், கார்பனீராக்சைடு, மெத்தனால் ஆகியன பிரிகின்றன. ஓர் அமோனியம் அயனி (5) உற்பத்தியாகிறது. நீராற்பகுப்பின்போது ஒரு ஐதராக்சிலிக் குழு 6 கட்டமைக்கப்படுகிறது. அமோனியம் அயனி பிரிந்து ஓர் ஆல்டிகைடு (7) உருவாகிறது.

பயன்பாடுகள்

தொகு

குளுக்கோசு நேரடியாக சோடியம் ஐப்போகுளொரைட்டால் ஆக்சிசனேற்றம் அடைந்து அரபினோசு உருவாகிறது. ஆல்டானிக் அமிலம் மற்றும் ஆல்டோ அமைடு உருவாகும் படிநிலைகள் தவிர்க்கப்படுகின்றன[4][5]. உதாரணம்: டி-குளூக்கோனமைடு டி-அரபினோசாக தரங்குறைதல்

 
Sugar example

ύமேலே ஒரு ஐதராக்சிலிக் குழு அமிடோ குழு அருகே உள்ளது என்பதைக் காட்ட வீர்மேன் சோதனை பயன்படுத்தப்படுகிறது. இவ்வினை வரலாற்று நோக்கில் முக்கியமானது. ஏனென்றால் இவ்வினை மெதுவாக விளைபொருளைக் கொடுத்து அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Weerman, R. A. (3 September 2010). "Sur une synthèse d'aldéhydes et de l'indol". Recueil des Travaux Chimiques des Pays-Bas et de la Belgique 29 (1-2): 18–21. doi:10.1002/recl.19100290104. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Wang, Zerong (2009). Comprehensive organic name reactions and reagents. Hoboken, N.J.: John Wiley. pp. 2946–2950. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-70450-8.
  3. Arcus, C. L.; Greenwood, D. B. (1953). "398. The Hofmann reaction with α- and β-hydroxy-amides: reactions of the intermediate isocyanates". Journal of the Chemical Society (Resumed): 1937. doi:10.1039/JR9530001937. 
  4. editor, Martha Windholz, editor ; Susan Budavari, associate editor ; Lorraine Y. Stroumtsos, assistant editor ; Margaret Noether Fertig, assistant (1976). The Merck index : an encyclopedia of chemicals and drugs (9th ed.). Rahway, N.J.: Merck. pp. ONR-92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-911910-26-3. {{cite book}}: |last1= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  5. Weerman, R. A. (3 September 2010). "L'action de l'hypochlorite de sodium sur les amides d'α-hydroxy-acides et de polyhydroxy-acides, ayant un groupe hydroxyle à la place α. Nouvelle méthode de dégradation des sucres". Recueil des Travaux Chimiques des Pays-Bas et de la Belgique 37 (1): 16–22. doi:10.1002/recl.19180370103. 

.