வீர கேரளர் என்பது அரசக் குடும்பத்தின் பெயராகும். இவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 10ம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். தமிழகத்தில் கொங்கு நாட்டில் உள்ள தென் கொங்கு பகுதி வீர கேரளர்கள் ஆட்சியிலும், வடகொங்கு கொங்குச் சோழர் ஆட்சியிலும் (கோநாட்டார்) இருந்தனர்.

வீரராகவச் செப்பேடுகள் (1225 CE)

வரலாற்றுக் குறிப்புகள்

தொகு
  • கே.வி.சுப்ரமணிய ஐயர் கூறும் போது இடைக்கால சேரர்களைத்தொடர்ந்து ஆட்சி செய்த கேரள மரபினரே வீர கேரளர் என்கிறார்.
  • பேராசிரியர் வீ.மாணிக்கம் அவர்கள் கோக்கண்டன் மரபில் வந்தவர்களே வீர கேரளர் என்கிறார்.
  • ரா.ஜெகதீசன் என்பார் பாண்டியர் மரபில் இருந்து வந்தவர்கள் என்கிறார்.

மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் ஆய்வுக்குரியது. தென் கொங்கு பகுதியில் வீர கேரளர்கள் சுமார் 250 ஆண்டுகள் (கி.பி.958-1200) ஆண்டுள்ளனர்.

வரலாற்றுக் குறிப்புகள்

தொகு
  1. வீர கேரள அமர புஜங்க தேவா, கொங்கு பரம்பரை.[1] திருவாலங்காட்டில் ராஜராஜனால் தோற்கடிக்கப்பட்டவர்.
  2. வீர கேரளன் நகரி நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. (11th-12th centuries AD).[2]
  3. வீர கேரளா எனும் சொல் மேற்குத் தமிழகக் கல்வெட்டில் காணப்படுகிறது. [2]
  4. வீர கேரளா 11 ஆம் நூற்றாண்டில் தென்னவர் மூவர் என குறிக்கப்படுகிறது [2] ராஜேந்திரச் சோழனால் தோற்கடிக்கப்பட்வர்.[2]

வீர கேரள மன்னர்கள்

தொகு

வீரகேரள அரசர்களின் பட்டியல்[3]

  1. வீர கேரள வீர நாராயணன் - (கி.பி.958-967)
  2. வீர கேரளன் அமரபுயங்கந்-(கி.பி.967-990)
  3. வீர நாராயணன் அதிசய சோழன்-(கி.பி.990-1021)
  4. அதிசய சோழன் வீர நாராயணன் -(கி.பி.1021-1040)
  5. வீர நாராயணன் வீர கேரளன்-(கி.பி.1040-1069)
  6. வீர கேரளன் அதிராஜன்-(கி.பி.1069-1092)
  7. அதிராஜராஜன் ஸ்ரீ ராஜ ராஜன்(கி.பி.1092-1129)
  8. ராஜ ராஜன் கரிகாலன் -(கி.பி.1129-1149)

மேற்கோள்கள்

தொகு
  1. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 136-37.
  2. 2.0 2.1 2.2 2.3 Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 304-05 and 322-23.
  3. கோயம்புத்தூர் மாவட்டத்தொல்லியல் கையேடு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_கேரளர்&oldid=4058474" இலிருந்து மீள்விக்கப்பட்டது