வெக்டரியன் கியோட்டோ
வெக்டரியன் கியோட்டோ (vectorian giotto) என்பது வெவ்வேறு வகையான பொருட்களுக்கு அசைவூட்டம் ஏற்படுத்த உதவும் மென்பொருட்களுள் ஒன்று. வெக்டரியன் நிறுவனத்தினால் இலவசமாக வழங்கப்படுகிறது. இது விண்டோசு 2000, எக்சுபி, விசுட்டா, 7 ஆகிய பதிப்புகளில் இயங்கும். கோப்பின் அளவு 8 எம்பி ஆகும். இதை .swf கோப்பு வடிவத்தில் சேமித்து, இணைய பக்கங்களில் பயன்படுத்த முடியும். இந்தக் கோப்பு அடோபி பிளாஷ் பிளேயரில் இயங்கும்.
![மென்பொருளின் திரைத் தோற்றம்](http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/9/92/Giotto.png/200px-Giotto.png)
![சின்னம்](http://upload.wikimedia.org/wikipedia/ta/2/22/Giottologo.png)
இணைப்புகள்
தொகு- மென்பொருளை பதிவிறக்க
- கியோட்டோ மென்பொருள் பற்றி (ஆங்கில மொழியில்)