வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள்

போரில் ஏவியவை எல்லாம் உடனடியாக வெடிப்பதில்லை. வெடிக்காதது ஆனால் வெடிக்கும் இவற்றைத்தான் நாம் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் என்போம். சில சமயங்களில் போதுமான அழுத்தம் பிரயோகிக்கப்படாமலோ அல்லது போதிய வெப்பம் இல்லாததினாலோ இவை வெடிக்காமல் இருக்கலாம், இவை ஆபத்தானவை. இவை வெடிக்காதவை ஆனால் வெடிக்ககூடியவை. பழைய கம்பி மணிக்கூடுகள் சில குலுக்கினால் ஓட ஆரம்பிக்கும், இதுபோலத்தான் சில காரணங்களுக்காக வெடிக்காத இவை சிறு அசைவினாற் கூட வெடிக்கக்கூடியவை, சில வெப்பத்தில் வெடிக்கும் (யுத்த இடங்களில் வளவைத் துப்பரவு செய்யத் தீமூட்டும் போது நிகழலாம்) கைக்குண்டுகள், 40 மில்லிமீட்டர் ரைபிள் குண்டு, மோட்டார் ஷெல், ஆர்பிஜி (ராக்கெட்டின்னால் உந்தப்படும் கிரனைட்). அண்மைக்காலமாக வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களே கூடுதலான விபத்துக்களுக்குக் காரணமாக அமைகிறது. இதில் 40 மில்லிமீட்டர் ரைபிள் குண்டு கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிசு என்பதுபோல் இரும்பால் ஆன கவச வாகனத்தையே தகர்க்ககூடியது, என்பதால் வெடித்தால் அநேகமாக இறப்பே ஏற்படும். கண்ணிவெடி நடவடிக்கைக்கான சுவிசு அமைப்பைச் சேர்ந்த மிதிவெடி அகற்றும் வல்லுனாரான மமோவின் இறப்பிற்கும் 40 மில்லிமீட்டர் கிரைனைட்டே காரணமாக அமைந்தது. [1]

மேலதிக வாசிப்பு

தொகு

மிதிவெடி அபாயக் கல்வி

உசாத்துணைகள்

தொகு
  1. வவுனியாவில் கண்ணிவெடி விபத்தில் பிரெஞ்சு நிபுணர் உயிரிழப்பு