வெட்சியரவம்
தமிழ் இலக்கணத்தில் வெட்சியரவம் என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வெட்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். வெட்சியின் ஐந்து நிலைகளுள் இத்துறை "கவர்தல்" என்னும் முதல் நிலையைச் சார்ந்தது. தொல்காப்பியம் இதனை "ஆ நிரைகளை கவர எழும் படையின் பேரரவம்" என்று கூறும். வெட்சி என்பது பசுக் கூட்டங்களைக் கவர்தலையும், அரவம் என்பது ஓசையையும் குறிக்கும். பகை நாட்டிலிருந்து பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வரப் படையினர் செல்லும்போது உண்டாகும் ஓசையைப் பொருளாகக் கொள்வது வெட்சியரவம் ஆகும்.
இதனை விளக்க, "பகை நாட்டுப் பசுக் கூட்டங்களைக் கவர்வதற்காகப் போர்முனைக்குச் செல்வதை வெட்சி வீரர் விரும்புவார்கள். அவ்வாறு விரும்புவதை வெளிப்படுத்துவது"[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.
- கலவார் முனைமேல்
- செலவு அமர்ந்தன்று
எடுத்துக்காட்டு
தொகு- நெடிபடு கானத்து நீள்வேல் மறவர்
- அடிபடுத்து ஆரதர் செல்வான் - துடிபடுத்து
- வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
- கட்சியுள் காரி கலுழ்ம்
- - புறப்பொருள் வெண்பாமாலை --.
குறிப்பு
தொகு- ↑ இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 18
உசாத்துணைகள்
தொகு- இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
- கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.