ஐயவி

(வெண்சிறு கடுகு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐயவி என்பது கடுகின் வகைகளில் வெண்சிறுகடுகு ஆகும்.
கருங்கடுகு (black mustard) (Brassica nigra), கேழ்க்கருகு (brown Indian mustard) (B. juncea), and வெண்சிறு கடுகு (white mustard) (B. hirta/Sinapis alba). போன்றவை கடுகின் வகைகள்.

மஞ்சள் நிறக் கடுகு
மஞ்சள் கடுகுப் பூ

கேழ்க்கடுகு (பழுப்புநிறக் கடுகு) இக்காலத்தில் தாளிக்கப் பயன்படுகிறது.
வெண்சிறுகடுகு பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாங்கைச் சங்கநூல்கள் தெரிவிக்கின்றன.

ஐயவிப் பயிர்

தொகு
ஐயவி குறிஞ்சிநிலப் பயிர்களில் ஒன்று.[1][2]
ஐயவி போல ஞாழல் மலர் பூக்கும்.[3]

ஐயவி எண்ணெய்

தொகு

எள் தரும் (நல்)எண்ணெய் போன்று ஐயவி எண்ணெய் தரும் வித்து.

  • குழந்தை பெற்ற தாயை ஐயவி பூசி நீராட்டுவர்.[4]
  • முழந்தையின் தலை முச்சியில் ஐயவி அப்புவர் [5]
  • குழந்தை பெற்ற தாய்க்கு ஐயவிப் புகை காட்டுவர்.[6]
  • இழவு வீட்டில் ஐயவி சிதறுவர்.[7]
  • முருகாற்றுப்படுக்கும் வீட்டு விழாவில் முருகாற்றுப்படுக்கும் பெண்ணின் மேல் எண்ணெயோடு கூடிய ஐயவியைத் தடவுவர்.[8]
  • போரின்போது சமாதான அடையாளமாக ஐயவி புகைப்பர்.[9]
  • தவம் செய்வோர் ஐயவிப் புகையைக் கைவிட்டது போலக் காதலன் தன்னைக் கைவிட்டான் என்கிறாள் ஒரு தலைவி.[10]
  • அரண்மனை மதில் கதவு எளிதாகச் சுழல ஐயவி எண்ணெய் அப்பியிருந்தனர்.[11]

ஐயவித் தாழ்மரம்

தொகு
  • கோட்டைக் கதவை மூடித் தாழ்பாள் போடும் மரத்தை ஐயவி என்றனர். எண்ணெய் தரும் ஐயவியிலிருந்து இதனை வேறுபடுத்திக் காடப் ‘பூணா-ஐயவி’ எனத் தெளிவாக்கம் தந்தனர்.[12]
  • இந்த ஐயவித் தாழ்மரத்தைத் திறக்க வில்விசைப் பொறி அமைத்திருந்தனர்.[13]

ஆரல்மீன் முட்டை

தொகு
ஆரல்மீன் முட்டையையும் ஐயவி என்றனர். (இதனை அக்காலத்தில் எண்ணெய் எடுக்கப்பட்ட மீன் எனலாம்) கொக்குக் குஞ்சுகள் ஆரல் ஈன்ற ஐயவி முட்டையையும், இறால் ஈன்ற பிள்ளைகளையும் இரையாக உண்ணும்.[14]

இவற்றையும் பார்க்க

தொகு
சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

தொகு
  1. நெடுங்கால் ஐயவி மதுரைக்காஞ்சி 287
  2. தொய்யாது வித்திய துளர்படு துடவை, ஐயவி அமன்ற வெண்கால் செறுவில், மை என விரிந்தன நீல் நறு நெய்தல் - மலைபடுகடாம் 123
  3. ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் குறுந்தொகை 50
  4. நற்றிணை 40, 370
  5. மணிமேகலை 3-134,
  6. அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை, விரவிய மகளிர் ஏந்திய தூபம் - மணிமேகலை 7-73
  7. புறநானூறு 281-4, 296-2,
  8. திருமுருகாற்றுப்படை 228
  9. நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும் கூற்றத்து அனையை - புறநானூறு 98-15,
  10. தவத்துக்கு ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின் கைவிட்டனரே காதலர் - புறநானூறு 358-4
  11. ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை - நெடுநல்வாடை 86
  12. பூணா ஐயவி தூக்கிய மதில - பதிற்றுப்பத்து 16-4,
  13. ஓங்குநிலை வாயில் தூங்குபு தகைத்த, வில்விசை மாட்டிய விழுச்சீர் ஐயவி - பதிற்றுப்பத்து 22-23
  14. புறநானூறு 342-9,
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயவி&oldid=2095391" இலிருந்து மீள்விக்கப்பட்டது