வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு என்பது வெண்டைக்காய் சாகுபடியில் அதன் பயிர்களை நன்கு பாதுகாப்பது குறித்த ஒரு செய்முறையாகும்

சாகுபடி முறைகள்

தொகு
  • மஞ்சள் நரம்பு தேமல் நோய் எதிர்ப்பு இரகங்களை தேர்வு செய்து பயிரிடுதல் வேண்டும்.
  • மக்காச்சோளம் (அ) சோளத்தை வயலை சுற்றி நடுவதன் மூலம் தண்டு மற்றும் காய்புழுக்களின் அந்துப்பூச்சிகள் வயயலினுள் நுழைவதை தடுக்க இயலும்.

இயந்திர முறைகள்:

தொகு
  • டெல்டா மற்றும் மஞ்சள் வண்ண அட்டை பொறியை வைப்பதன் மூலம் சாறுண்ணும் பூச்சிகளின் பாதிப்பை குறைக்கலாம்.
  • பறவை தாங்கிகளை எக்டருக்கு 25 வைப்பதன் மூலம் தண்டு மற்றும் காய்த் துளைப்பான்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
  • வேப்பங்கொட்டை கரைசல் 5சதம் இரண்டு (அ) மூன்று முறை தெளிப்பது பச்சை தத்துப்பூச்சி, வௌளை ஈ மற்றும் செம்பேனின் பாதிப்பை குறைக்க உதவும். பாதிப்பு பொருளாதார சேதநிலையை தாண்டும்போது ஊடுருவி செல்லும்
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான அளவில் உயயோகிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • இனக்கவர்ச்சி பொறியை (பச்சை காய்ப்புழு மற்றும் புள்ளிக் காய்புழுவிற்கு தனித்தனியாக) எக்டருக்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் வைப்பதன் மூலம் அந்துப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.

உயிரியல் முறைகள்:

தொகு
  • டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை எக்டருக்கு 1-1.5 இலட்சம் வரை நட்ட 30-35 வது நாள் முதல் வார இடைவெளியில் ஆறுமுறை விடுதல் காய்ப்புழுக்களின் பாதிப்பை குறைக்க உதவும்.
  • மஞ்சள் நரம்பு தேமல் நோயால் பாதிக்கப்பட்ட பயிர்களை அவ்வப்போது சேகரித்து அழிக்க வேண்டும்.
  • தண்டு மற்றும் காய்ப்புழுக்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அப்புறப்படுத்துதல் வேண்டும்.

ரசாயன முறைகள்:

தொகு
  • செம்பேனின் பாதிப்பு அதிகமானால்

ஸ்பைரோமெசிபெரான் -0.5 மிலி/லி (அ) புரோப்பர்கைட் -1.5 மிலி/லி (அ) அவர்மெக்டின் -1.0 மிலி/லி என்றளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

  • சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் 5 கிராம்லி/ட்டர் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி 5 கிராம்லி/ட்டர் என்றளவில் இலைவழி தெளிப்பும் மற்றும் இவற்றை ஏக்கருக்கு 2 கிலோ என்றளவில் தொழு உரத்துடன் கலந்து இடுவது நோய் தாக்குதலை குறைக்க உதவும்.

பேசில்லோமைசிஸ் லில்லேசினஸ் 2 கிலோவை 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு (அ) 500 கிலோ மண்புழு உரத்துடன் கலந்து இடுதல் நூற்புழு பாதிப்பை குறைக்க உதவும்.

உசாத்துணை

தொகு

வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்கள், (நூல்) 2017 ஜூன்,வேளாண்மைத் துறை, தர்மபுரி