வெண்பலகை
வெண்பலகை (Whiteboard) என்பது ஒரு வெள்ளைப்பலகை ஆகும். இது குறியீட்டுப் பலகை, உலர்-அழிக்கும் பலகை, உலர்-துடைப்பு பலகை, பேனா-பலகை என்றும் பலவாறு அறியப்படுகிறது. வெள்ளைப் பலகைகள் கல்வி நிலையங்களில் பயன்படுத்தப்படும் கரும்பலகையுடன் ஒத்ததாக இருக்கின்றது. ஆனால் இதன் மென்மையான மேற்பரப்பு வேகமாக எழுதவும், எழுதியவற்றை எளிதில் அழிக்கவும் உதவுகிறது. 1990களின் நடுப்பகுதியில் வெண்பலகைகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்தது. தற்காலத்தில் இவை பல அலுவலகங்கள், சந்திப்பு அறைகள், பள்ளி வகுப்பறைகள் மற்றும் பிற வேலை சூழல்களின் தகவல்களை தெரிவிக்கப்பயன்படும் பொருட்களில் ஓர் அங்கமாகிவிட்டன.
வெண்பலகை என்பது உருவகப்படுத்தக்கூடிய கணினி மென்பொருள் அம்சங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய "மெய்நிகர் வெப்கோர்ட்சு" ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களை வரையவும் எழுதவும் அனுமதிக்கின்றன. வெண்பலகையானது மெய்நிகர் சந்திப்பு, மற்றும் உடனடி செய்தி பகிர்வு ஆகியவற்றில் பயன்படுகிறது. வெண்பலகையானது ஊடாடும் வெண்பலகை (interactive whiteboard) என்றும் அறியப்படுகிறது.
வரலாறு
தொகுஒளிப்படக் கலைஞரும், கொரிய போர் வீரருமான மார்டின் ஹீட் என்பவர் வெண்பலகையை கண்டறிந்தார்.[1][2] இவர் தற்செயலாக ஒரு குறிப்பானைக் கொண்டு எழுதி அதனை துடைக்க முயன்றபோது, குறிப்பானின் மையை மிகவும் எளிதாக அழிக்க முடியும் என புரிந்து கொண்டார். 1960 களின் முற்பகுதியில் வெண் பலகைகள் வணிக ரீதியாகக் கிடைத்தன, ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. தொடக்க கால வெண் பலகைகளை ஈரமான துணியால் துடைக்க வேண்டியிருந்தது, மேலும் பலகை அழிக்கப்பட்ட பிறகும், குறிப்பான்கள் அடையாளங்களை விட்டுச் செல்லும் போக்கைக் கொண்டிருந்தன.[3][4] வெண் பலகைகளுக்கான உலர்-அழிக்கும் குறிப்பான்கள் 1975 இல் கண்டுபிடிக்கப்பட்டன.[5] 1990 களின் முற்பகுதியில் வெண் பலகைகள் பொதுவாக வணிகப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்பட்டன.[6] 1990 களில், தூசி ஒவ்வாமை உள்ள குழந்தைகளின் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் கணினிகளை சேதப்படுத்தும் சுண்ணாம்பு தூசியின் சாத்தியக்கூறுகள் காரணமாக வகுப்பறைகளில் கரும்பலகைகள் அகற்றப்பட்டு வெண்பலகைகள் மிகப்பொதுவானவையாக மாறின. 1990களின் பிற்பகுதியில், சுமார் 21% அமெரிக்க வகுப்பறைகள் சுண்ணக்கட்டியைப் பயன்படுத்தும் கரும்பலகைகளிலிருந்து வெண் பலகைகளாக மாற்றப்பட்டன.[7] மார்டின் ஹீட் உலோகத்தை ஒத்த வெண்பலகையை உருவாக்கினார். ஒரு வர்த்தக நிகழ்ச்சியில் இவர் தன்னுடைய கண்டுபிடிப்பின் காப்புரிமையை டி-மார்க்குக்கு விற்றார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Yarna, David E. Y. (2012). Evernote For Dummies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118224106. பார்க்கப்பட்ட நாள் April 28, 2020.
- ↑ McClean, Garry (August 20, 2014). "Whiteboards History". The Workplace Depot. பார்க்கப்பட்ட நாள் October 24, 2016.
- ↑ McClean, Garry (August 20, 2014). "Whiteboards History". The Workplace Depot. பார்க்கப்பட்ட நாள் October 24, 2016.
- ↑ Shaw, Tom (December 17, 2014). "The History of Whiteboard Learning". Magnatag Visible Systems. பார்க்கப்பட்ட நாள் September 8, 2022.
- ↑ McClean, Garry (August 20, 2014). "Whiteboards History". The Workplace Depot. பார்க்கப்பட்ட நாள் October 24, 2016.
- ↑ Overly, Steven (November 12, 2016). "Google releases Jamboard, a high-tech whiteboard for office meetings". Toronto Star (Toronto Star Newspapers Ltd.): p. B4. https://www.thestar.com/business/2016/11/12/google-releases-jamboard-a-high-tech-whiteboard-for-office-meetings.html.
- ↑ Wojenski, Jerry. "Erasing the Past, Typing the Future: Timeline of the Chalkboard". Archived from the original on October 25, 2016.
- ↑ Zorn, Marc (31 August 2014). "Who Invented the Dry Erase Board". VisionLaunch. பார்க்கப்பட்ட நாள் 24 October 2016.