வெண்பிரம்பு பாதுகாப்பு நாள்

வெண்பிரம்பு பாதுகாப்பு நாள் உலகெங்கும் தேசிய அளவில் கடைபிடிக்கப்படும் நாளாகும். 1964ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 அன்று இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பன்னாட்டு அரிமா கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் வெள்ளைப் பிரம்பு கண்பார்வை அற்றவர்களின் அடையாளச் சின்னம் எனப் பிரகடனம் செய்யப்பட்டதுடன் இதற்கான சட்ட அங்கீகாரமும் வழங்கப்பட்டது. உலகெங்கும் பரந்து வாழும் இலட்சக் கணக்கான விழிப்புலன் அற்ற மக்களுக்கு உதவும் நோக்கத்துடனும், மக்களின் கவனத்தை ஈர்த்து சமூக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 15ஆம் திகதி பன்னாட்டு வெள்ளைப் பிரம்பு தினம் நினைவுகூரப்படுகிறது. 1969ஆம் ஆண்டு பன்னாட்டு விழிப்புலனற்றோர் சம்மேளனம் கொழும்பில் நடத்திய பன்னாட்டு மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வெண்பிரம்பு பாதுகாப்பு நாள்
நாள்அக்டோபர் 15
நிகழ்வுஆண்டுக்கொருமுறை
A long white cane
நீளமான வெண்பிரம்பு, வெண்பிரம்பு பாதுகாப்பு நாளின் அடையாளம்

விழிப்புலனற்றவர்களின் வாழ்வில் வழிகாட்டும் ஒளிவிளக்காக வெண் பிரம்பு கருதப்படுகிறது. அவர்களின் வழிநடைக்கான ஊன்றுகோலாகவும், உதவு சாதனமாகவும், அடையாளச் சின்னமாகவும் வெள்ளைப் பிரம்பு விளங்குகின்றது.

வெளி இணைப்புகள்

தொகு