வெனிசுவேலாவில் தொழிலாளர் சட்டம்

வெனிசுவேலாவில் தொழிலாளர் சட்டம் (Labour Law in Venezuela)[1] திருத்தப்பட்டு புதிய சட்டம் 2013 மே 7 இல் நடைமுறைக்கு வந்தது.

வெனிசுவேலாவில் தொழிலாளர் சட்டத்தில் மிகப்பெரிய திருத்தம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களின் வேலை நேரம் குறைப்பு உத்தரவாதம், நீண்ட மகப்பேறு விடுப்பு உத்தரவாதம், அனைவருக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சட்டத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கு மேலாக, தொழிற்சங்கங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதன் விளைவாக இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. தொழிலாளர்களுக்கான தொழிலாளர் சட்டம் என்ற அடிப்படையில் நாட்டில் உள்ள செல்வத்தின் பயனை தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் விதத்தில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

திருத்தங்கள் தொகு

  • வெனிசுவேலாவில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாரத்தில் 44 மணி நேரத்தில் இருந்து 40 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • வாரத்தில் இரண்டு நாட்கள் தொழிலாளி பணி புரிந்திருந்தால் ஒரு நாள் வார விடுப்பு வழங்க வேண்டும்.
  • மகப்பேறுக்கு தயாராகும் பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பு 6 வாரம் விடுப்பும், பிரசவத்திற்கு பின்பு 20 வாரமும் விடுப்பு அளிக்கப்படும். குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தந்தைக்கு இரண்டு வார விடுப்பும் அளிக்கப்படும். இதே விடுப்புக்கள் அனைத்தும் மூன்று வயதிற்கு குறைந்த ஒரு குழந்தையை தத்தெடுக்கும் குடும்பத்தின் தம்பதிகளுக்கும் வழங்கப்படும்.
  • அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். அது சுய தொழில் செய்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். அதே போல் குடும்பப் பெண்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-12.

வெளி இணைப்புகள் தொகு