வெப்பக் கதிர்வீசல்
வெப்பக் கதிர்வீசல் என்பது பொருளில் உள்ள தூண்டப்பட்ட துகள்களில் வெப்ப சலனத்தால் வெளிப்படும் வெப்ப மின்காந்தக் கதிர்வீச்சாகும். ஒரு பொருளின் வெப்பநிலை தனிச்சுழி வெப்பநிலைக்கு மேல் செல்லும் போது வெப்பக் கதிர்வீச்சை உமிழ்கிறது. பார்க்கக்கூடிய ஒளி மற்றும் ஒரு வெப்பவெளியீட்டு ஒளி விளக்கு வெளியிடும் அகச்சிவப்பு கதிர் ஆகியவை வெப்பக் கதிர்வீசல் உதாரணங்களாகும். அகச்சிவப்பு கதிர் விலங்குகளின் உடலில் இருந்தும் உமிழப்படுகிறது, அதை ஒரு அகச்சிவப்பு கேமரா மூலம் கண்டறிய முடியும். மற்றும் அண்டவியல் மைக்ரோ அலை பின்புல கதிர்வீச்சு உமிழப்படும் அகச்சிவப்பு ஒளி அடங்கும்.