வெப்பப் பதனிடல்
வெப்பப் பதனிடல் (Heat treating) என்பது உலோகத்தின் இயற்பியல் பண்பை மாற்றும் செயலமுறையாகும். சில சமயம் வேதியல் பண்பையும் மாற்றவும் வெப்பப் பதனிடல் பயன்படுகிறது. உலோகத் தொழிற்கலையில் வெப்பப் பதனிடல் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணாடி போன்ற மற்ற பொருள்களுக்கும் வெப்பப் பதனிடல் பயன்படுகிறது. வெப்பப் பதனிடலில் சூடாக்குதல் மற்றும் குளிர்வித்தல் போன்ற பலநிலை செயல்பாடுகளை கொண்டது. இந்த செயல்முறை மூலம் உலோகத்தை மென்மையாக்கவும் மற்றும் உறுதியேற்றவும் முடியும். வெப்பப் பதனிடல் தொழில் நுட்பம் தன்மையாக்கல், காய்ச்சிக்குளிரவைத்தல், புறக்கடினப்படுத்துதல், கடினப்படுத்தல் மற்றும் வெப்பம் தணித்தல் போன்றவற்றை உள்ளடக்கியது. [1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ ZIA, Abdul Wasy; Zhou, Zhifeng; Po-wan, Shum.; Lawrence Li, Kwak Yan (24 January 2017). "The effect of two-step heat treatment on hardness, fracture toughness, and wear of different biased diamond-like carbon coatings". Surface and Coatings Technology 320: 118–125. doi:10.1016/j.surfcoat.2017.01.089.
- ↑ Alvarenga, H. D.; Van de Putte, T.; Van Steenberge, N.; Sietsma, J.; Terryn, H. (8 October 2014). "Influence of Carbide Morphology and Microstructure on the Kinetics of Superficial Decarburization of C-Mn Steels". Metallurgical and Materials Transactions A 46: 123–133. doi:10.1007/s11661-014-2600-y.
- ↑ Physical Metallurgy 1996, ப. 136–198