வெப்பப் பாய்மம்
வெப்பப் பாய்மம் (Thermal fluid) என்பது தொழிற்சாலைகளில் உயர்வெப்ப நிலைகளில் வெப்ப மாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் பாய்மம் ஆகும். பொதுவாக வெப்ப மாற்றத்திற்காகச் சூடேற்றிய நீரோ அல்லது நீராவியோ தான் பரவலாகப் பயன்படுத்தப்படும். ஆனால், உயர்வெப்பநிலை (high temperature systems) அமைப்புக்களில் நீர், நீராவி இவற்றைப் பயன்படுத்த வேண்டுமெனில் அதிக அழுத்தம் தேவைப்படும். அதற்குச் செலவும் அதிகமாகும். இச்சிக்கல்களைத் தவிர்க்கவும், திறம்பட உயர்வெப்பநிலை வெப்ப மாற்றத்தைச் சாதிக்கவும் சிறப்புப் பாய்மங்களைப் பயன்படுத்தலாம்.
சுடுநெய் (hot oil) எனப்படும் இந்த வெப்பப் பாய்மங்கள் சூழியல் அழுத்தத்திலேயே 300 டிகிரி செல்சியசு வரை சூடேற்ற உதவும். இதையே நீர் நீராவி கொண்டு வெப்பமாற்ற முனைந்தால், அதற்கு 85 பார் அளவு அழுத்தம் தேவைப்படும்.
பைஃவீனைல் (Biphenyl, C12H10) டை-ஃவீனைல் ஆக்சைடு (diphenyl oxide, C12H10O) ஆகிய இரண்டின் நற்சேர்க்கையால்(eutectic) ஆன டவ்தெர்ம் (வணிகப் பெயர் DOWTHERM™) என்பதும், டூராதெர்ம் (Duratherm) என்னும் பாய்மமும் வெப்பப் பாய்மங்களுக்கான சில எடுத்துக் காட்டுகள். ,