வெப்ப அலகு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வெப்ப அலகு (Heat unit-HU );. எக்சு கதிர் குழாயில், விரைவாகச் செல்லும் எலக்ட்ரான்கள் நேர்மின் முனையிலுள்ள இலக்கினைத் தாக்கும் போது எக்சு கதிர்கள் தோற்றுவிக்கப்படுவதுடன் நிரம்ப வெப்பமும் இலக்கில் தோற்றுவிக்கப் படுகின்றன.உண்மையில் எலக்ட்ரான்களின் ஆற்றலில் 99% வெப்பமாகவும் மீதி 1% எக்சு கதிர்களாகவும் வெளிப்படுகின்றன.அதிக வெப்பம் குழாயினை பழுதடையவும் செய்யலாம். இலக்கில் தோன்றும் வெப்பத்தினை அளவிட வெப்ப அலகு பயன்படுகிறது. இது குழாயிலுள்ள மின்முனைகளுக்கிடையே உள்ள மிகை மின் அழுத்த வேறுபாட்டினை (kVp) குழாயில் பாயும் மின்னோட்டத்தால் (mAs) பெருக்கி பெறப்படுகிறது. s என்பது மின்னோட்டம்பாயும் கால அளவாகும்
- Heat unit- HU= kVp*mAs ஆகும்