வெப்ப வலயக் காடு

வெப்ப வலயக் காடு என்பது வெப்ப வலயங்கள் என்று அழைக்கப்படும் கடகக் கோட்டையும் மகரக்கோட்டையும் ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள காடுகளைக் குறிக்கும். வெப்ப வலயக் காடுகளை வகைப்படுத்துவது கடினம். எனினும் உலகில் உள்ள காடுகளில் கிட்டத்தட்ட பாதி காடுகள் வெப்பவலயக் காடுகளே ஆகும்.[1]

போர்னியோ மழைக்காடு

வெப்ப வலயக் காடுகள் என்பவை பசுமை மாறா மழைக்காடுகளும் ஈரப்பதமான காடுகள் என்று எண்ணப்பட்டாலும் உண்மையில் 60% காடுகளே மழைக்காடுகள் ஆகும்.[2] மீதமுள்ள காடுகள் மாங்குரோவ், வறண்ட காடுகள், சவான்னா முதலான பல்வேறு வகையான காடுகளாகும்.

வெப்ப வலயக்காடுகள் - சூழல் மண்டலங்கள் (FAO)

அச்சுறுத்தல்

தொகு

நிறைய காடுகள் உயிரியல் பல்வகைமை நிறைந்த பகுதிகளாக அடையாளப் படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றுள் பல காடுகள் இயற்கையாகவம் மனிதர்களாலும் பாதிக்கப்படுகின்றன. அனைத்து வெப்ப வலயக் காடுகளும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளன.[3]

போர்னியோவில் நடத்தப்பட்ட ஆய்வொன்று, 1978 க்கும் 2018 க்கும் இடையில் எவ்வாறு காடுகளின் அளவு போர்னியோத் தீவின் அளவில் 76%-இல் இருந்து 50%-ஆகக் குறைந்தது என்பதை விளக்குகிறது. இது பெரும்பாலும் தீயினாலும் விளைநிலப் பெருக்கத்தினாலும் நடைபெற்றதாகும். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. D’Annunzio, Rémi, Lindquist, Erik J.,MacDicken, Kenneth G. 2017 “Global forest land-use change from 1990 to 2010: an update to a global remote sensing survey of forests Forest Resource Assessment Working Paper 187” FAO, Rome.
  2. Anatoly Shvidenko, Charles Victor Barber, Reidar Persson et al. 2005 "Millennium ecosystem assessment." Ecosystems and human wellbeing: a framework for assessment Washington, DC: Island Press
  3. Robin L. Chazdon 2003 “Tropical forest recovery: legacies of human impact and natural disturbances” Perspectives in Plant Ecology, Evolution and Systematics 6/1,2, pp. 51–71
  4. Gaveau DLA (2016) What a difference 4 decades make: Deforestation in Borneo since 1973 CIFOR (retrieved 29 October 2017)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_வலயக்_காடு&oldid=2749755" இலிருந்து மீள்விக்கப்பட்டது