வெப் மாஸ்டர்
ஒன்று அல்லது பல இணையதளங்களை பராமரிப்பதற்கு பொறுப்பான நபர்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
வெப் மாஸ்டர் (webmaster) வலை இயக்குநரும் மேலாளரும் வடிவமைப்பாளரும் ஆவார். இவரது பணி வலை கண்காணித்தல், வலை இயக்கம், வெப் இயக்குதல் போன்றவை அறிதல் அவசியம். இவர் ஜாவாஸ்கிரிப்ட், பி.எச்.பி மற்றும் பேர்ள் ஆகிய மொழிகளை அவசியம் அறிந்திருக்க வேண்டும். இவர் தள உருவாக்கத்திலும், நிர்வகிப்பது மட்டுமின்றி, உள்ளடக்கத்தை தொகுத்தல், விளம்பரங்களைச் சேர்த்தல் போன்ற பணிகளையும் செய்வார். இவரின் முக்கியப் பணிகள் தளத்தில் ஒவ்வொருவருக்கும் அணுக்கங்களை (அதிகாரம்) நிர்வகிப்பது, தளத்தின் வடிவமைப்பை மாற்றுவது ஆகியன. இவரின் பணிகளில் வலைதளத்தில் உள்ளடக்கத்தைச் சேர்ப்பதும் ஒன்று. பெரிய தளங்களின் வெப் மாஸ்டர்கள் தளங்கள் தொடர்பான அதிகளவிலான மின்னஞ்சல்களையும் நிர்வாகிப்பார்கள்.