வெரெணிகே துறைமுகம்
வெரெணிகே அல்லது பர்ணிஸ் துறைமுகம் சங்ககாலத்திலேயே தமிழகத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த, எகிப்தின் பண்டைய துறைமுக நகரம் ஆகும். செங்கடலின் மேலைக் கடற்கரையில் அமைந்துள்ள இத்துறைமுகம் தற்போது மெதினெத் எல் ஹரஸ் அன்று அழைக்கப்படுகிறது. 1994 தொடங்கி இங்கு டெலவேர் பல்கலைக்கழகம் பிற அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ள அகழாய்வுகளில் பண்டைத் தமிழகத்துடன் இத்துறைமுகம் கொண்டுள்ள தொடர்பை மெய்ப்பிக்கும் பல சான்றுகள் கிடைத்துள்ளன.
வெரெணிகே Βερενίκη Medinet-el Haras | |
---|---|
வெரெணிகேவின் செயற்கைகோள் படம் | |
மாற்றுப் பெயர் | பெர்னீசி ட்ரோக்ளோடைடிகா, பரணிஸ் |
இருப்பிடம் | செங்கடல் ஆளுநரகம், எகிப்து |
பகுதி | மேட்டுநில எகிப்து |
ஆயத்தொலைகள் | 23°54′38″N 35°28′34″E / 23.91056°N 35.47611°E |
வகை | குடியேற்றம் |
வரலாறு | |
கட்டுநர் | இரண்டாம் தாலமி |
கட்டப்பட்டது | கி.மு 3-ஆம் நூற்றாண்டின் முற்பாதி |
பயனற்றுப்போனது | கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு |
காலம் | தாலமைய்க் அரசு முதல் பைசாந்தியப் பேரரசு வரை |
- "வெரெணிகேவில் கண்டெடுக்கப்பட்டவைகளில் எதிர்பாராதன தொன்மையான இந்தியப் பொருட்களாகும்: பண்டைய மத்தியதரைக்கடல் பகுதியில் கிடைத்தவற்றிலேயே ஒற்றைப்பெரிய (7.55 கிகி) கருமிளகுக்கொத்தின் சேகரம் (ஒரு கோயில் முற்றத்தில் இருந்த நைல் மண்ணாலான பெரிய பாத்திரத்தில் "தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது" என்று குறிப்புடன் இருந்தது); கணிசமான தொகையில் இந்தியாவில் செய்யப்பட்ட நுண்கலங்கள், சமையல் பாத்திரங்கள், இந்திய பாணி மண்பாண்டங்கள்; குப்பைக் குவியல்களிலிருந்த இந்தியாவில் செய்யப்பட்ட பாய்மரத் துணிகள், கூடைகள், விரிப்புகள்; கணிசமான தேக்குக் கட்டைகள், கருமிளகு, தேங்காய், மிளிர்கற்களாலான மணிகள், கேமியோ என்ற கைவினைப் பொருட்களைச் செதுக்கும் சட்டங்கள்; தமிழ் பிராமியில் கொற்ற(ன்) என்ற தென்னிந்தியத் தலைவனின் பெயர்பொறித்த பானை ஓடு; தமிழகத்திலிருந்து (அன்று கேரளத்தின் பெரும்பகுதியையும் உள்ளடக்கி இருந்தது) வந்தவர்கள் முந்தைய ரோமானிய காலத்திலாவது வெரெணிகேவில் வாழ்ந்ததற்கான சான்றுகள்; தமிழ் மக்களின் இருப்பு புத்தமத வழிபாட்டினர் இருந்திருக்கலாம் என்பதையும் சுட்டிநிற்பதற்கான சான்றுகள்; வெரெணிகேவின் வடக்கே 300கிமீ தொலைவில் உள்ள இன்னொரு ரோமானியத் துறைமுகத்தில் இந்தியர் இருந்ததற்கான சான்றுகள்; நைல் சாலையில் இந்திய மட்கலங்கள்; ஒரு இந்திய வழிப்போக்கர் சென்றிருப்பதைக் குறிக்கும் பாறைக் கல்வெட்டு; "இந்தியாவில் கட்டப்பட்ட நாவாய்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டும் ஏராளமான சான்றுகள்"; (தென்னிந்தியாவுக்கே உரித்தான) தேக்கு மரம் (உடைக்கப்பட்ட நாவாய்களிலிருந்து எடுக்கப்பட்டு) வெரெணிகேவின் கட்டிடங்களில் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான" ஆதாரம் ஆகியன."[1]
- "பெரெணிகேயில் கண்டெடுக்கப்பட்ட பானைச்சில்லில் 'கொற்பூமான்' என்றுள்ளது. இதுவும் வணிகர் ஒருவரின் பெயராக இருக்க வாய்ப்புள்ளது"[2]
குறிப்புதவி
தொகு- ↑ R. Krishnakumar,South Indians in Roman Egypt?Frontline Volume 27 - Issue 08 :: Apr. 10-23, 2010.
- ↑ ப.சண்முகம், கடல்சார் வரலாறும் சங்ககாலத் தமிழக வணிகர்களும், நிகமம் - வணிக வரலாற்றாய்வுகள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010, பக்.8