வெற்றுக் காடு
வெற்றுக் காடு (Empty forest)என்ற சாெல் 1992 ஆம் ஆண்டய பயோ சைன்ஸ் அறிவியல் மாத இதழில் வெளியான "The Empty Forest" என்ற கட்டுரையில் கென்ட் எச். இரெட்போர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. வெற்றுக் காடு என்பது பெரிய பாலூட்டிகளற்ற சூழ்நிலை மண்டலத்தைக் குறிக்கிறது. வெற்றுக் காடுகளில் பெரும்பாலும் பெரிய, மரங்களைக் கொண்டு உள்ளன, ஆனால் மனிதன் வேட்டையாடியதன் விளைவாக அதிக அளவில் பெரிய பாலூட்டிகள் இல்லாமல் பாேய்விட்டது. எல்லா பாலூட்டிகளும் இல்லாமல் பாேய்விட்டாலும், வெற்று காடுகள் சிறந்த வாழ்விடங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு காட்டில் மரங்கள் அதிகமாக நிறைந்திருப்பதால் அது ஓா் ஆரோக்கியமான காடு ஆகாது. வெற்றுக் காடு சூழ்நிலை மணடலத்தின் ஓா் அமைப்பு ஆகும், விலங்குகளை வேட்டையாடுவதால் ஓா் சூழ்நிலை மண்டலமே அழிந்து இல்லாமல் பாேய்விடும் என்பதை ஒரு வெற்றுக் காடு காட்டுகிறது.[1]
விதை பரவலுக்குக் காரணமான பல பொிய பாலூட்டிகள் தற்பாேது அழிந்து காெண்டு வருகிறது. விதைகள் பரவ காற்றும் இல்லாமல் பாலூட்டிகள் தங்கும் பல மர இனங்கள், விதை முளைப்புத் திறன் குறைந்து விடும்போது, பெரிய விதை கொண்ட மரங்கள் சிறிய விதைகளோடு முற்றிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன, இதனால் ஒரு பகுதியில் தாவர வாழ்க்கைச் சமநிலை மாறுகிறது.[2]
பெரிய பாலூட்டிகளின் அழிவு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடைபெறுகிறது. அந்த விலங்குகளின் அழிவை விளைவிக்கும் மனிதச் செயல்கள் விலங்குகளின் வாழ்வை இலக்காகக் கொள்ளாதவை. மறைமுகமான இந்த அழிவு வழிமுறை வாழிட அழிவு ஆகும். இருப்பினும், பெரிய பாலூட்டிகளின் மறைமுக வழிவகையின் பிற எடுத்துகாட்டுகள் பழங்கள், கொட்டைகள் பெரிய பாலூட்டிகளுக்கு உணவாகத் தேவை என்றாலும் அதிகமான வேட்டையாடல்களில், அவை கூடுதல் திரட்டாக இருக்கும். பெரிய பாலூட்டிகளைப் பாதுகாப்பதற்கான மறைமுக வழிமுறை தேவைக்கான மற்றொரு இடர், பாதரசம், புகை அல்லது ஒலி மாசு போன்ற நவீன மனிதனின் நடவடிக்கைகளாகும்.[1]
இரண்டு விதமான நேரடி தீங்குவிளைவுகளும் உள்ளன. அவைகள் வாழ்வாதார வேட்டை மற்றும் வணிக வேட்டை ஆகும். வேட்டையாடப்பட்ட விலங்குகளின் இனங்கள் பொதுவாக அந்தப் பகுதியில் உள்ள மிக அாியவகை இனங்கள் ஆகும். ஒரு பகுதியிலுள்ள பெரிய பாலூட்டிகள் பெரும்பாலும் ஒரு சில வகைகளால் மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன, ஆனால் மொத்த உயிரினத்தின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. மிதமான வேட்டையாடும் பகுதிகளில் பாலூட்டி இனங்கள் 80.7% குறைகிறது. அதிகமான வேட்டையாடுதல் பகுதிகளில், பாலூட்டி இனங்கள் 93.7% குறைகிறது.[1]
மேற்காேள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Redford, Kent (June 1992). "The Empty Forest". BioScience 42 (6): 412–422. doi:10.2307/1311860 இம் மூலத்தில் இருந்து 2013-11-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131111203443/http://www.biology.ufl.edu/courses/pcb5356/2011fall/kitajima/Redford1992Biosci.pdf.
- ↑ Putz, F. E., E. G. Leigh Jr, S. J. Wright. 1990. Solitary confinement in Panama. Garden, 14: 18-23.