வெற்றுச் சுழற்சி

வெற்றுச் சுழற்சி (Null cycle) என்பது வளிமண்டல வேதியியலில், வேதிப்பொருள் சிற்றினங்கள் தங்களுக்குள் ஒன்றிணைந்து இறுதியில் நிகர உற்பத்தி அல்லது நிகர நீக்குதல் ஏதுமின்றி மாற்றமடையும் வினையூக்கச் சுழற்சியைக் குறிக்கிறது. அடுக்கு வளிமண்டலத்தில் இந்த வெற்றுச் சுழற்சி நிகழ்வானது வேற்றுநிலைத் தொடர் வினைகளில் முக்கியப்பங்கு வகித்து ஓசோன் அடுக்கு குறைவுக்கு காரணமாகிறது[1]

அடுக்கு வளிமண்டலத்தில் ஓசோன் குறைவுக்கு நைட்ரசன் ஆக்சைடு இனங்களை ஈடுபடுத்துவதற்கு இத்தகைய ஒரு சுழற்சியே காரணமாகிறது.[2]

NO + O3 → NO2 + O2
NO2 + O → NO + O2
Net: O + O3 → 2O2

என்பது ஒரு வினையூக்க சுழற்சி ஆகும்.

வழக்கமல்லாத ஆக்சிசன் சிற்றினங்களின் பாதுகாப்பை அனுமதிக்கும் NO2 வாயுவின் ஒளியாற்சுழற்சிக்கு சாத்தியமுள்ளதால், தொடர்புடைய வெற்றுச் சுழற்சி ஒளியாற்சுழற்சியுடன் போட்டியிடுகிறது.

NO + O3 → NO2 + O2
NO2 + hν → NO + O
Net: O3 + hν → O + O2

என்பதனால் O மற்றும் O3 இரண்டும் வேகமாக பரிமாறிக்கொள்ள இயலும். கடைசி சுழற்சியானது ஓசோன் நுகர்வு வீதத்தை பாதிப்பதில்லை. ஆனால் பகல்நேரத்தில் ஒளியாற்சுழற்சி நிகழும்போது இவ்வீதத்தைக் குறைக்கிறது. குளோரின், புரோமின் போன்ற தனியுறுப்புகளுடன் NO வாயுவும் வினைபுரிந்து வெற்றுச் சுழற்சிகளுக்கான பாதைக்கு வழிவகுக்கிறது.

Cl + O3 → ClO + O2
ClO + NO → Cl + NO2
NO2 + hν → NO + O
Net: O3 + hν → O + O2

முதன்மைச் சுழற்சிகள் என்ற பெயராலும் அழைக்கப்படும் பிற வெற்றுச் சுழற்சிகள், பயனுறத்தக்க வகையில் வினைத்திறமிக்க சிற்றினங்களைப் பிடித்து வைத்திருந்து தேக்கத்தை உற்பத்தி செய்கின்றன. இருநைட்ரசன் ஐந்தாக்சைடு உருவாக்கத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

NO2 + NO3 → N2O5

வளிமண்டலத்தில் இருக்கும் NOx குடும்ப சிற்றினத்தின் 10 சதவீதத்தை வழியடைத்து ஓசோனை அழிக்கும் வினையூக்க சுழற்சிகளின் ஆற்றலை இவ்வினை கட்டுப்படுத்துகிறது[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Holloway, Ann M.; Wayne, Richard P. (2010). Atmospheric Chemistry. Royal Society of Chemistry. p. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781847558077.
  2. "NOAA Study Shows Nitrous Oxide Now Top Ozone-Depleting Emission". NOAA. 2009-08-27. பார்க்கப்பட்ட நாள் 2012-05-23.
  3. Girard, James (2009). Principles of Environmental Chemistry (2 ed.). Jones & Bartlett Learning. pp. 135–136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780763759391.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றுச்_சுழற்சி&oldid=2747688" இலிருந்து மீள்விக்கப்பட்டது