வெளித்தொடு முக்கோணம்
வடிவவியலில் ஒரு முக்கோணத்தின் வெளிவட்டங்கள் அம் முக்கோணத்தைத் தொடும் மூன்று புள்ளிகளை இணைத்து வரையப்படும் முக்கோணம் வெளித்தொடு முக்கோணம் (extouch triangle) எனப்படுகிறது.
ஆட்கூறுகள்
தொகுa,b,c -முக்கோணத்தின் பக்க நீளங்கள்; A, B, C முறையே இப் பக்கங்களுக்கு எதிர்க் கோணங்கள் எனில், வெளித்தொடு முக்கோணத்தின் உச்சிகளின் முக்கோட்டு ஆட்கூறுகள் (trilinear coordinates):
-
- (அல்லது)
தொடர்புடைய வடிவங்கள்
தொகு- பிளப்பிகள்
மூல முக்கோணத்தின் ஒவ்வொரு உச்சியையும் அதன் வெளித்தொடு முக்கோணத்தின் ஒத்த உச்சியையும் இணைக்கும் மூன்று கோடுகளும் மூல முக்கோணத்தின் பிளப்பிகள் ஆகும். இம் மூன்று பிளப்பிகளும் நாகல் புள்ளியில் சந்திக்கின்றன. மேலும் அவை மூல முக்கோணத்தின் சுற்றளவை இருசமக்கூறிடுகின்றன
- மாண்டர்ட் உள் நீள்வட்டம்
மாண்டர்ட் உள்நீள்வட்டம், மூல முக்கோணத்தின் மூன்று பக்கங்களையும் வெளித்தொடு முக்கோணத்தின் மூன்று உச்சிப்புள்ளிகளில் தொடுகின்றது.[1]
பரப்பளவு
தொகுவெளித்தொடு முக்கோணத்தின் பரப்பளவு :
இங்கு , , மூன்றும் முறையே, மூல முக்கோணத்தின் பரப்பளவு, அரைச்சுற்றளவு, உள்வட்டத்தின் ஆரம் ஆகியவற்றைக் குறிக்கும். , , மூன்றும் மூல முக்கோணத்தின் பக்கநீளங்களாகும்.
இதுவே உட்தொடு முக்கோணத்தின் பரப்பளவும் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Juhász, Imre (2012), "Control point based representation of inellipses of triangles" (PDF), Annales Mathematicae et Informaticae, 40: 37–46, MR 3005114.