வெளியம்
வெளியம் என்பது சங்ககால ஊர்களில் ஒன்று. இதன் அரசன் வானவரம்பன். சங்ககாலப் புலவர் மாமூலனார் இந்த ஊரின் அழகைப் பாராட்டிப் பாடியுள்ளார்.
தலைவி ஒருத்தி தன் நல்லழகு வெளியம் என்னும் ஊரைப்போல் இருந்ததாகவும், அவன் தன்னைப் பிரிந்து சென்ற காலத்தில் அந்த அழகையெல்லாம் தன்னுடன் கொண்டுசென்றுவிட்டதாகவும் குறிப்பிடுகிறாள். [1]
அடிக்குறிப்பு
தொகு- ↑ அவரே, வான வரம்பன் வெளியத்து அன்ன நம் மாணலம் தம்மொடு கொண்டார் – மாமூலனார் பாடல் அகம் 359