வெள்ளாவி (புதினம்)
வெள்ளாவி நாவல் எழுத்தாளர் விமல் குழந்தைவேலால் எழுதப்பட்டது. இந்நூலின் முதல் பதிப்பு 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. உயிர்மை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருந்தது. இந்நூல் 216 பக்கங்களைக் கொண்டது.
நூலாசிரியர் | விமல் குழந்தைவேல் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | உயிர்மை பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2004 |
பக்கங்கள் | 216 |
முன்னுரை
தொகுஇந்நூலுக்கு மண்ணிலிருந்து மரங்கள் முளைக்கின்றன... எனும் தலைப்பில் முன்னுரை எழுதப்பட்டுள்ளது. அதில்,
அகழ்ந்து உயிர்ப்பிக்கப்பட்ட தொல் நகரங்களிலிருந்து பாணர்களின் பாடல்கள் கேட்கின்றன. நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் உயிர்கொண்டெழுந்து மீதி வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்துக்கொண்டிருக்கின்றனர். சமர்க்களங்களில் மலைகள் பொருதுகின்றன, குதிரைகளின் குளம்புகளில் பொறித்தீ பறக்கிறது.யானைகள் குருதி சொரிந்து சரிகின்றன, புராதன மாந்தர்கள் இன்னொரு முறையும் கொல்லப்படுகின்றனர். இதிகாசங்களின் கதாநாயக வில்லன் பாத்திரங்கள் தலைகீழாய் ஆட்களை மாற்றி பரிசோதனை செய்து பார்க்கின்றனர்.
எனக் குறிப்பிடுகிறார்.