வெள்ளி (1945 சிற்றிதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வெள்ளி இந்தியா, காரைக்காலிலிருந்து 1945ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். வெள்ளி எனும் பெயரில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பல சிற்றிதழ்கள் வெளிவந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மு. சஹீது கமால் என்பவர் இவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.
இசுலாமிய இலக்கிய அறிவியல் பிரசார ஆக்கங்களை இது கொண்டிருந்தது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் வெளிவந்தது. இசுலாமிய கதைகள், கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், செய்திக் கருத்துக்கள் ஆகியன இடம்பெற்றிருந்தன.