வெள்ளை யானை

2021இல் வெளியான தமிழ் திரைப்படம்

வெள்ளை யானை (Vellai Yaanai ) என்பது 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். சுப்ரமணியம் சிவா இயக்கிய இப்படத்தில் சமுத்திரக்கனி, ஆத்மியா ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் தயாரித்த இது 11 ஜூலை 2021 அன்று சன் தொலைகாட்சியில் வெளியிடப்பட்டது.[1][2]

வெள்ளை யானை
இயக்கம்சுப்ரமணியம் சிவா
நடிப்புசமுத்திரக்கனி
ஆத்மியா ராஜன்
இசைசந்தோஷ் நாராயணன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்எஸ். வினோத் குமார்
ஒளிப்பதிவுவிஷ்ணு
தொகுப்புஏ. எல். ரமேஷ்
தயாரிப்பு நிறுவனங்கள்மினி ஸ்டுடியோஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்சூலை 11, 2021 (2021-07-11)

நடிகர்கள்தொகு

 • வெள்ளை குஞ்சுவாக சமுத்திரக்கனி
 • வேண்டாம் அமிர்தமாக ஆத்மியா ராஜன்
 • கேகேவாக யோகி பாபு
 • எஸ். எஸ். ஸ்டான்லி
 • ராமதாஸ்
 • பாவ செல்லத்துரை
 • சரண்யா ரவிச்சந்திரன்

தயாரிப்புதொகு

நீண்ட ஓய்வுக்குப் பிறகு சுப்பிரமணியம் சிவா இயக்குநராகத் திரும்பினார். மேலும் சமுத்திரக்கனியை விவசாயியாக முக்கிய வேடத்தில் நடிக்கத் தேர்ந்தெடுத்தார். ஜோசப் (2018) என்ற மலையாளத் திரைப்படத்தில் ஆத்மியா ராஜனின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் இவரை முன்னணி நடிகையாகத் தேர்ந்தெடுத்தார். படத்தின் தயாரிப்பிற்குப் பிந்தைய பணிகள் ஜூன் 2019 இல் தொடங்கியது. ஆனால் படத்தின் வெளியீடு இரண்டு ஆண்டுகள் தாமதமானது.[3][4][5][6]

ஒலிப்பதிவுதொகு

சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையத்திருந்தார்.[7]

வெளியீடுதொகு

படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் 11 ஜூலை 2021 அன்று வெளியிடப்பட்டது. சினிமா எக்ஸ்பிரஸின் ஒரு விமர்சகர், "படத்தின் ஒழுங்கின்மை நல்ல எண்ணம் கொண்ட சமுத்திரக்கனியின் கண்ணீரைக் கெடுக்கிறது" என்று எழுதினார். மேலும் "ஒழுங்கற்ற எழுத்து நன்றாக நிகழ்த்தப்பட்ட கிராமப்புற நாடகத்தை அழிக்கிறது." [8] திரைவிமர்சன இணையங்களான பிகைன்ட்வுட்ஸ், தினமலர் ஆகியவை படத்திற்கு கலவையான விமர்சனங்களை அளித்தன.[9][10][11]

சான்றுகள்தொகு

 1. "Samuthirakani's 'Vellai Yaanai' to release directly on TV". The Times of India. 22 July 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Samuthirakani's Vellai Yaanai to premiere next Sunday". The New Indian Express.
 3. "Thiruda Thirudi-director Subramaniam Shiva's comeback film, Vellai Yaanai, ready for release". The New Indian Express. 28 October 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Samuthirakani's 'Vellai Yaanai' to skip theatrical release!". Sify. 20 June 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 5. Subramanian, Anupama (16 June 2019). "Samuthirakani is a farmer now". Deccan Chronicle. 25 May 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 6. "This film talks about the plight of farmers". The Times of India. 18 June 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 7. https://www.raaga.com/tamil/movie/vellaiyanai-songs-T0004834
 8. "Vellai Yaanai Movie Review: Inconsistency mars this well-intentioned Samuthirakani tearjerker". The New Indian Express. 25 September 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Vellai Yaanai (Tamil) (aka) Vellai Yanai (Tamil) review". Behindwoods. 13 July 2021. 20 July 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 10. "வெள்ளை யானை - விமர்சனம்". cinema.dinamalar.com. 2 November 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Vellai Yaanai – Movie Review by Naveen". 12 July 2021. 12 July 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 November 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_யானை&oldid=3712800" இருந்து மீள்விக்கப்பட்டது