வெள்ள நீர்ப்பாசனம்
வெள்ளநீர்ப் பாசனம் அல்லது மேற்றளப் பாசனம் (Surface irrigation) என்பது நீர்ப்பாசன முறைகளுள் ஒன்று ஆகும்.[1] இது நெடுங்காலமாக உழவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தப் பாசன முறையில் அதிகளவிலான நீர் ஆவியாகும் சூழ்நிலை காணப்படுகிறது. இது நெற்பயிருக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.
செய்முறை
தொகுநிலத்தில் மேட்டுப்பாங்கான பகுதிகளில் நீரை பாய்ச்சினால், தாழ்வான இடங்களுக்கும் பரவும். நீர் நிலத்தால் உறிஞ்சப்பட்ட பின்னரும் குளம் போல் தேங்கி இருக்கும்.