வெ. இராஜேந்திரன்

வெ. இராஜேந்திரன் (V. Mathiazhagan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூரைச் சார்ந்தவர். இராஜேந்திரன் கிருட்டிணகிரி அரசுக் கல்லூரியில் பல்கலைக்கழக முன்பட்ட வகுப்பினை முடித்துள்ளார். இராஜேந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு மாதம் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "V.rajendran(AIADMK):Constituency- BARGUR(KRISHNAGIRI) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._இராஜேந்திரன்&oldid=3313039" இலிருந்து மீள்விக்கப்பட்டது