வேகமாக வளரும் கொடி

வகைப்பாடு தொகு

தாவரவியல் பெயர் : புராரியா கிர்சுடா (Preraria hirsuta)

குடும்பம் : லெகுமினோசே (Leguminosae)

இதரப் பெயர்கள் தொகு

குட்குசூ கொடி (Kudza vine)

கொடியின் அமைவு தொகு

இது மிகவும் வேகமாக வளரக்கூடிய கொடியாகும். இது கடினமாக இருக்கும். இதன் வளர்ச்சி மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இது ஒரு பருவக்கொடி ஆகும். இதன் ஒரு பருவத்தில் மட்டும் 50 முதல் 60அடி உயரம் வளர்கிறது. இதன் வேர்ப் பகுதி கிழங்கு போன்றது. இதிலிருந்து அதிகப்படியான ஸ்டார்ச் எடுக்கிறார்கள். இதன் உள்ளே உள்ள நார் துணி நெய்வதற்கு பயன்படுத்துவதால் துணி நீண்ட நாட்கள் உழைக்கிறது.

இக்கொடியின் தாயகம் ஜப்பான் ஆகும். இதன் பிறகு இது சீனாவில் வளர்க்கிறார்கள். இதனுடைய இலை மிகப் பெரியதாக இருக்கும். இதை தீவனமாகப் பயன்படுத்துகிறார்கள். இக்கொடியில் பூ இளம் ஊதா சிவப்பு நிறத்தில் இருக்கும். இக்கொடியின் வேர்பகுதி ஆச்சரியமாக பல வடிவங்களில் இருக்கிறது. கொடி 4 முதல் 5 அடி உயரம் வளர்ந்த பிறகே கிளை விடுகிறது. இதன் விதை உணவாகப் பயன்படுகிறது.

மேற்கோள் தொகு

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேகமாக_வளரும்_கொடி&oldid=3612459" இலிருந்து மீள்விக்கப்பட்டது