வேக்பீல்டைட்டு-(Ce)
வனேடேட்டு கனிமம்
வேக்பீல்டைட்டு-(Ce) (Wakefieldite-(Ce)) என்பது CeVO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இக்கனிமம் அருமண் தனிமமான வனேடேட்டின் கனிமம் வேக்பீல்டைட்டின் சீரியம் ஒப்புமை ஆகும். செனோடைம் குழுவில் இது உறுப்பினரும் ஆகும்.
வேக்பீல்டைட்டு-(Ce) Wakefieldite-(Ce) | |
---|---|
பொதுவானாவை | |
வகை | அரு மண் கனிமம் |
வேதி வாய்பாடு | (CeVO4) |
இனங்காணல் | |
நிறம் | அடர் சிவப்பு முதல் கருப்பு, வெளிர் மஞ்சள் முதல் நீலப் பச்சை |
படிக இயல்பு | பட்டகப் படிகங்கள் |
படிக அமைப்பு | நாற்கோணம் |
பிளப்பு | தெளிவு - {100} |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 4–5 |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் முதல் ஒளிபுகாது வரை |
ஒப்படர்த்தி | 4.74 (அளக்கப்பட்டது) |
ஒளியியல் பண்புகள் | ஒற்றை அச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nω = 2.000, nε = 2.140 |
வேக்பீல்டைட்டு-(Ce) கனிமம் முதலில் 1977 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.[1] சாயிர் குடியரசிலுள்ள சின்சாசா நகரத்தின் தென்மேற்கில் உள்ள குசு படிவுகளில் கண்டறியப்பட்டதால் முதலில் கனிமத்திற்கு குசைட்டு என்று பெயரிடப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் இது வேக்பீல்டைட்டு-Y இன் சீரியம் ஒப்புமையாகக் கருதப்பட்டு மறுபெயரிடப்பட்டது.[2]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் வேக்பீல்டைட்டு-(Ce) கனிமத்தை Wf-Ce[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Deliens, Michel; Piret, Paul (1997). "La kusuïte, (Ce3+, Pb2+, Pb4+) VO4, nouveau minéral" (in fr). Bulletin de la Société Française de Minéralogie et de Cristallographie 100: 39–41. doi:10.3406/bulmi.1977.7116.
- ↑ Handbook of Mineralogy, Wakefieldite-(Ce).
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.