வேக்பீல்டைட்டு-(Nd)


வேக்பீல்டைட்டு-(Nd) (Wakefieldite-(Nd)) என்பது NdVO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். வழக்கத்திற்கு மாறான அருமண் தனிமமான வனேடேட்டின் கனிமம் வேக்பீல்டைட்டு நியோடிமியத்தின் ஒப்புமையாகக் கருதப்படுகிறது. செனோடைம் கனிமக் குழுவின் உறுப்பினர் ஆகும்.

வேக்பீல்டைட்டு-(Nd)
Wakefieldite-(Nd)
பொதுவானாவை
வகைஅரு மண் கனிமம்
வேதி வாய்பாடு(NdVO4)
இனங்காணல்
நிறம்நிறமற்றது அல்லது இலேசான சிவந்த இளம்சிவப்பு
படிக அமைப்புநாற்கோணகம்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்

வேக்பீல்டைட்டு-(Nd) கனிமம் முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில் சப்பான் நாட்டின் சிகோக்கு தீவில் உள்ள கோச்சி மாகாணம் காமி நகரத்தில் உள்ள அரேசு சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் வேக்பீல்டைட்டு கனிமத்தை என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.Wf-Nd[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Moriyama, T.; Miyawaki, R.; Yokoyama, K.; Matsubara, S.; Hirano, H.; Murakami, H.; Watanabe, Y. (2011). "Wakefieldite-(Nd), a new neodymium vanadate mineral in the Arase stratiform ferromanganese deposit, Kochi Prefecture, Japan". Resource Geology 61 (1): 101–100. doi:10.1111/j.1751-3928.2010.00151.x. Bibcode: 2011ReGeo..61..101M. 
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேக்பீல்டைட்டு-(Nd)&oldid=4131616" இலிருந்து மீள்விக்கப்பட்டது