வேங்கட கிருஷ்ணன் கோவில், வேலூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
வேங்கட கிருஷ்ணன் திருக்கோவில் தொரப்பாடியில் (துறைப்பாடி) உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்கோவில். ராதா ருக்மணி உடனுறை வேங்கட கிருஷ்ணன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
- இக்கோவிலில் உற்சவர் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி.
- இக்கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர் இரு கை கூப்பிய நிலையில் பக்த ஆஞ்சநேயராக அருள் பாலிக்கின்றார்
- இத்திருக்கோவில் 150 ஆண்டிற்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது.
விழாக்கள்
தொகு- கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்படும் அந்நாளில் கிருஷ்ணன் திருவீதி உலா சிறப்பாக நடைபெறும் இக்கோவிலில் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமையும் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
- மேலும் மார்கழி மாதம் அனைத்து நாட்களும் திருப்பாவை சேவை நடைபெறும்.
- மார்கழி மாத முக்கோட்டி ஏகாதசி வெகு சிறப்பாக நடைபெறும்.
- அன்றைய தினம் பெருமாள் கருடவாகன புறப்பாடு நடக்கும்.அன்றிரவு ஏகாந்த சேவை நடைபெறும்
- மார்கழி மாத கூடரவெள்ளி தினத்தன்று ராதா ருக்மணி வேணுகோபால் சுவாமி திருக்கல்யாணம்
சிறப்பாக நடைபெறும் மார்கழி மாதம் அனைத்து நாட்களும் வீதி பஜனை நடைபெறும்
- பொங்கல் தினத்தன்று கிருஷ்ணன் திருவீதி உலா எழுந்தருள்வார்
கோவில் அமைப்பு
தொகு- இத்திருக்கோவில் வேலூரில் இருந்து ஸ்ரீபுரம் (தங்க கோவில்) செல்லும் வழியில் தொரப்பாடி என்ற இடத்தில் பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ளது
- இத்திருக்கோவில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரமும் கருவறை விமானமும் அமைந்துள்ளது
- இக்கோவிலில் மூலவர் வேங்கட கிருஷ்ணன் எங்கும் இல்ல வகையில் புன்னகை புரிபவராக உள்ளார்
- இக்கோவிலில் வைணவம் முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன.