வேங்கைமார்பன்

வேங்கைமார்பன் என்பவன் சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன்.

அவன் கானப்பேரெயில் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். கானப்பேரெயில் இக்காலத்தில் காளையார் கோயில் என வழங்கப்படுகிறது. உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் இந்த வேங்கைமார்பனை வென்று கானப்பேரெயிலைத் தன் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக்கொண்டான்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. ஐயூர் மூலங்கிழார் – புறநானூறு 21
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேங்கைமார்பன்&oldid=836438" இலிருந்து மீள்விக்கப்பட்டது