வேணியர் இடுக்குமானி
வேணியர் இடுக்குமானி (Vernier scale அல்லது Vernier caliper) என்பது சாதாரண மீற்றர் கோலைக் காட்டிலும் திருத்தமாக நீளத்தை அளப்பதற்காகப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இதை பொறியியலாளர்களும் இயந்திர உருவாக்குனர் மற்றும் திருத்துனர்களும் ஓரளவு துல்லியமான நீள அளவீட்டைப் பெறுவதற்காகப் பயன்படுத்துவர். வேணியர் இடுக்குமானியில் பிரதான அளவிடை மற்றும் வேணியர் அளவிடை ஆகிய இரு அளவிடைகள் காணப்படுகின்றன. மிகத் திருத்தமான அளவிடை தேவைப்படும் சந்தர்ப்பங்களிலேயே வேணியர் இடுக்குமானி பயன்படுத்தப்படுகின்றது.
பாகங்கள்
தொகுஅளக்கும் முறை
தொகுபூச்சிய வழு
தொகுவேணியர் இடுக்குமானியைக் கொண்டு வாசிப்பை எடுக்கும் முன் அக்கருவியில் பூச்சிய வழு உள்ளதா என அறிதல் அவசியமாகும். பூச்சிய வழுவற்ற கருவியில் இரு தாடைகளும் பொருந்தியிருக்கும் போது வேணியர் அளவிடை மற்றும் பிரதான அளவிடை ஆகியவற்றின் பூச்சியங்கள் பொருந்தியிருத்தல் அவசியமாகும். அவ்வாறு பொருந்தாவிடில், அக்கருவியில் பூச்சிய வழுவைக் கணித்த பின்னரே தேவையான வாசிப்பை எடுத்தல் வேண்டும். வேணியர் அளவிடையின் பூச்சியம் பிரதான அளவிடையின் பூச்சியத்தை விட்டு நகர்ந்து வாசிப்பைக் காட்டியிருந்தால் அது நேர்ப்பூச்சிய வழுவாகும். நேர்ப்பூச்சிய வழுவின் வாசிப்பைப் பின்னர் பெறப்படும் வாசிப்பிலிருந்து கழிக்க வேண்டும். வேணியர் பூச்சியம் வெளிநகர்ந்து பிரதான அளவிடையின் பூச்சியம் பின்னகர்த்தப்பட்டுக் காணப்பட்டால் அது மறைப்பூச்சிய வழுவாகும். மறைப்பூச்சிய வழுவைப் பின்னர் பெறப்படும் வாசிப்பிலிருந்து கழிக்க வேண்டும்.
பயன்பாடு
தொகுஅருகில் தரப்பட்டுள்ள உதாரணம் மூலம் வேணியர் இடுக்குமானியைப் பயன்படுத்தும் முறையை அறிந்து கொள்ளலாம். இங்கு ஒரு உருக்குப் பொருளின் வெளிவிட்டம் புறத்தாடைகளால் அளக்கப்படுகின்றது. இக்கருவியில் பூச்சிய வழு இல்லை. பொருளை தாடைகளிடையே வைத்த பின்னர் திருகாணியைப் பயன்படுத்தி வேணியர் அளவிடை அசைய முடியாமல் நிறுத்தப்படும். இதன் இழிவெண்ணிக்கை இங்கு 1/20=0.05 mm எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வேணியர் பூச்சியத்துக்கு முன்னால் உள்ள பிரதான அளவிடை 2.4 cm உள்ளது. வேணியர் அளவிடையில் ஏதோவொரு பிரிவு பிரதான அளவிடையின் ஒரு கோட்டுடன் சரியாகப் பொருந்தும். இப்பிரிவின் எண்ணிக்கையை இழிவெண்ணிக்கையால் பெருக்குவதால் வேணியர் அளவிடை பெறப்படும். இங்கு 14ஆம் வேணியர் கோடு பொருந்துவதால் வேணியர் அளவிடை 14 x 0.05 mm = 0.7 mm. பிரதான அளவிடை மற்றும் வேணியர் அளவிடையைக் கூட்டி எம்மால் 24.7 mm = 2.47cmஐ வெளிவிட்ட வாசிப்பாகப் பெறுகின்றோம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Vernier acuity definition at the Online Medical Dictionary