வேதகாலப் பெண் கவிஞர்கள்

ரிக் வேத காலத்தில் இருபது பெண்பாற் கவிஞர்கள் இருந்தனர் என்று ஆர்ஷானுக்ரமணி குறிப்பிடுகிறது. ”பிரகத்தேவதா” எனும் நூல் 27 பெண் கவிஞர்கள் இருந்தனர் என்கின்றது. இந்தப் பெண் கவிஞர்களில் 24 பெண் கவிஞர்கள் பாடல் ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ளதாகவும், இவர்களில் மூன்று பெண் கவிஞர்களின் பாடல்கள் அதர்வ வேதத்திலும் இருக்கின்றன. எனவே வேதகாலத்தில் 24 பெண்பாற் கவிஞர்கள் இருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது.

வேதகாலப் பெண் கவிஞர்கள் பாடல்கள் வேதங்களில் இடம் பெற்றுள்ள மண்டலம் சூத்திரம் ஆகியவற்றின் அட்டவணை இது.

எண் பெயர் மண்டலம் சூத்திரம்
1 அகஸ்திய பகிநீ 10 60
2 அதிதாட்சாயளி 10 72
3 அபாலா ஆத்ரேயி 8 91
4 ஆசஸ்க பத்நீ சஸ்வதி 8 1
5 இந்த்ர மாதாதேவ பகிநீ 10 28
6 இந்துஸ்நுசா சீர்கபத்நீ 10 28
7 இந்துராணி 10 86
8 ஊர்வசி 10 95
9 கோதா 10 134
10 கோஷாகாஷீவதி 10 39-40
11 ஜீகுப்ரஹம ஜாயா 10 109
12 யமிவைவ ஸ்வதீ 10 19 , 154
13 ரோமஸா 10 126
14 லோபலமுத்ரா 1 179
15 வாக் ஆம்ப்ரூணி 10 125
16 விஸ்வ வாரா ஆத்ரேயி 6 28
17 சசீபௌலோமி 10 159
18 சகண்டி நீகாஸ்யபீ 9 104
19 சுரத்தா காமாய நீ 10 151
20 சரமா தேவசுநீ 10 108
21 சார்ப்பராக்நீ 10 189
22 சிகதா நிவாவரீ 9 86
23 சூர்யா சாஷத்பீ 10 85
24 மமதா 1 147
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதகாலப்_பெண்_கவிஞர்கள்&oldid=3081308" இலிருந்து மீள்விக்கப்பட்டது