வேதசாகை

நான்கு வேதங்களுக்கும் கிளைகளாக உள்ள உபபிரிவுகள் சாகைகள் எனப்படும். எல்லா சாகைகளும் தற்காலத்தில் காணப்படவில்லை. இருக்கு வேதத்தில் ஐதரேய சாகை மந்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது. யசுர் வேதத்தில் காண்வ சாகை, தைத்திரிய சாகை,மாத்தியந்தன சாகை, என மூன்று சாகைகள் கிடைத்துள்ளன. சாம வேதத்தில் கௌதம சாகை, தலவகார சாகை என இரண்டுள்ளன. வேதத்திலுள்ள சாகைகள் ஒவ்வொன்றும் மந்திரம், பிராமணம், உபநிடதம் என மூன்று பிரிவுகளாகக் காணப்படும். ஒவ்வொரு வேதசாகை முடிவிலும் ஒரு உபநிடதம் இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது. பற்பல சாகைகள் இன்று இல்லாமல் போனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட உபநிடதங்கள் கிடைத்துள்ளன.

மேலும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதசாகை&oldid=1830997" இருந்து மீள்விக்கப்பட்டது