வேதித் தொகுப்பு

வேதித் தொகுப்பு (Chemical synthesis) என்பது ஒரு பொருளை அல்லது பல பொருள்களை தயாரிக்கும் நோக்கத்துடன் வேதி வினைகளை நிகழ்த்துகிற ஒரு வேதியியல் செயல் முறையாகும்[1]. ஒன்று அல்லது பல வினைகளின் மூலம் இயற்பியல் மற்றும் வேதிப்பொருள்களை கையாளுவதால் இவ்விளைபொருள் அல்லது விளைபொருள்கள் கிடைக்கின்றன. தற்கால சோதனைக்கூட பயன்பாட்டில் மறு ஆக்கம் செய்யவும், நம்பகத்தன்மையுடனும் பல சோதனைக்கூடங்களில் நிறுவி பயன்படுத்தவும் முடியும் எனக் கருதப்படுகிறது.

வினைப்பொருள் அல்லது வினைப்படு பொருளாக சேர்மங்களை தேர்ந்தெடுப்பதிலிருந்து வேதித் தொகுப்பு தொடங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வினைபடு பொருள்கள் மீது பல்வேறு வகையான வினை வகைகள் பிரயோகிக்கப்பட்டு ஒரு விளை பொருள் தொகுக்கப்படுகிறது. அல்லது ஓர் இடைநிலை விளைபொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக வினைபடு பொருளை கலக்க வேதி உலை அல்லது சாதாரணமான கோளவடிவக் குடுவை போன்றவை அவசியமாகின்றன. பல வினைகளின் முடிவில் இறுதி விளைபொருள் தயாரித்து பிரிக்கப்பட வினை தொடங்குவதற்கு முன்னர் சில முன் செயல்முறைகள் தேவைப்படுகின்றன [1].

வினையின் இறுதியில் உருவாகும் விலைபொருளின் அளவு வினை விளைச்சல் எனப்படுகிறது. குறிப்பாக வேதியல் தொகுப்பு வினையில் உருவாகும் வேதியியல் விளைபொருட்களின் எடை கிராம் அலகிலும் அல்லது கோட்பாடுகளின் படியான கணக்கீட்டின் அடிப்படையில் சதவீதமாக வெளியிடப்படுகிறது. இத்தகைய தொகுப்பு வினைகளின் போது விரும்பத்தகாத பக்க வினைகள் நிகழ்ந்து தேவையான வினை பொருட்களின் விளைச்சலைக் குறைக்கும் செயல்முறையும் நிகழ்வதுண்டு. எர்மான் கோல்ப் என்பவர் இன்றைய நடைமுறையில் உள்ள வேதித்தொகுப்பு வினையின் பொருளுடன் முதன் முதலில் வேதித்தொகுப்பு வினையைப் பயன்படுத்தினார்.

மூலோபாயங்கள்

தொகு

வினைபடு பொருள் அ வை வினை விளைபொருள் ஆ வாக மாற்றுவதற்கு ஒற்றை படிநிலையைத் தாண்டி வேதித் தொகுப்பு வினைகளில் பல மூலோபாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலபடி வேதித் தொகுப்பு வினைகளில் ஒரு வேதிச் சேர்மம் தொடர்ச்சியான தனித்தனி வினைகளால் தொகுக்கப்படுகிறது. ஒவ்வொரு வினையும் அவற்றின் தனிவினைகள் மூலம் நிகழ்கின்றன [2]. உதாரணமாக ஓர் ஆய்வகத் தொகுப்பு வினையில் பாராசிட்டமாலைத் தொகுக்க மூன்று தனித்தனியான செயற்கை முறைகள் பயன்படுகின்றன. அடுக்கடுக்கு வினைகளில் பல வேதியியல் மாற்றங்கள் ஒரு வினைபடு பொருளுக்குள்ளேயே நிகழ்கின்றன. பல வினைபடு பொருட்கள் பங்கேற்கும் வினையில் 11 வெவ்வேறு வினைகளுக்கு உட்பட்ட பின்னர் ஒரு தனி வினைவிளை பொருள் உருவாதலும் இங்கு உண்டு. பல மின்திறன் எதிர்விளைவுகளில் ஒற்றை எதிர்வினை உற்பத்தி மற்றும் ஒரு தொலைநோக்கி உருவாக்கம் ஆகியவற்றில் ஒரு எதிர்வினை இடைநிலைகள் தனிமையாக்குதல் இல்லாமல் பல மாற்றங்கள் வழியாக செல்கிறது. ஓருலைத் தொகுப்பு முறையில் ஒரு வினைபடு பொருள் எந்த விதமான இடைநிலை பொருள்களையும் பிரித்துக் கொடுக்காமல் பல வேதிமாற்றங்கள் வழியாக விளைபொருளைக் கொடுக்கவும் செய்கிறது.

கரிமத் தொகுப்பு வினைகள்

தொகு

கரிமத் தொகுப்பு வினைகள் என்பது கரிம சேர்மங்களைத் தயாரிக்க உதவும் ஒரு சிறப்பு கிளை தயாரிப்பு முறையாகும்.. ஒட்டுமொத்த தொகுப்பு வினை போன்ற முறைகளில் ஒரு குறிப்பிட்ட சிக்கலான வேதிப் பொருளைத் தயாரித்துத் தொகுப்பதற்கு பல படிநிலைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. கூடுதலான நேரத்தையும் செலவிட அவசியம் உண்டாகிறது. கரிமத் தொகுப்பு வினைகள் வழியாக கரிமச் சேர்மங்களைத் தயாரிப்பதற்கு மிகுந்த திறன் தேவைப்படுகிறது. சிக்கலான மற்றும் மதிப்பு மிக்க வேதிப்பொருட்களைத் தொகுப்பவர்கள் வேதியியலாளர்கள் மத்தியில் மதிப்புமிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள். இத்தகைய ஒரு கரிமப் பொருளைத் தொகுப்பு வினையில் தயாரித்தற்காக இராபர்ட்டு பர்ன்சு உட்வர்டுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. ஒரு வேதியியல் தொகுப்பு அடிப்படையான ஆய்வகச் சேர்மத்திலிருந்து தொடங்கி ஒரு புதிய விளைபொருளின் விளைச்சலில் முடிகிறது என்றால் அத்தொகுப்பு வினை முற்றிலும் ஒரு செயற்கை வினையாகும். ஒருவேளை தாவரங்கள் அல்லது விலங்குகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் புதிய சேர்மங்களுக்கு இட்டுச்செல்கிறது என்றால் அத்தொகுப்பு வினை பகுதி செயற்கை செயல்முறை வினை என விவரிக்கப்படுகிறது.

குறுகிய வரையறை

தொகு

வேதித் தொகுப்பு வினை என்பதற்கு மற்றொரு பொருளும் கூறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வகையான ரசாயன வினையை மட்டும் குறிப்பதாகவும் கூறி கட்டுப்படுத்தப்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருள்கள் நேரடியாக இணைந்து வினைபுரிந்து ஓர் ஒற்றை விளைபொருளை உருவாக்கும் வினை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Vogel, A.I., Tatchell, A.R., Furnis, B.S., Hannaford, A.J. and P.W.G. Smith. Vogel's Textbook of Practical Organic Chemistry, 5th Edition. Prentice Hall, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-46236-3.
  2. Advanced Organic Chemistry Part B: Reactions and Synthesis Francis A. Carey,Richard J. Sundberg Springer 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதித்_தொகுப்பு&oldid=2746060" இலிருந்து மீள்விக்கப்பட்டது