வேதி ஆற்றல்
வேதி ஆற்றல் (Chemical energy) என்பது வேதிப் பொருட்களின் ஆற்றலாகும், வேதிப்பொருள்கள் வேதிவினைக்கு உட்பட்டு வேறு பொருட்களாக மாறும்போது வெளியிடப்படும் ஆற்றலே வேதி ஆற்றல் எனப்படுகின்றது. வேதி ஆற்றலின் சேமிப்பு ஊடகத்தின் சில எடுத்துக்காட்டுகளுள் மின்கலங்கள், உணவு மற்றும் பெட்ரோல் ஆகியவை அடங்கும். வேதிப் பிணைப்புகளை உடைத்தல் மற்றும் உருவாக்குவது ஆற்றலை உள்ளடக்கியது, இது ஒரு வேதியியல் அமைப்பால் உட்கொள்ளப்படலாம் அல்லது உருவாகலாம்.[1] வேதிப் பொருட்களுக்கு இடையிலான வினையின் காரணமாக வெளியிடப்படும் அல்லது உறிஞ்சப்படும் ஆற்றல், ஆரம்ப மற்றும் இறுதி வெப்பநிலை ஒரே மாதிரியாக இருந்தால், விளைபொருள்களின் ஆற்றல் உள்ளடக்கம் மற்றும் வினைபடுபொருள்களின் ஆற்றல் உள்ளடக்கம் இவற்றுக்கு இடையிலான வேறுபாட்டிற்கு சமம். ஆற்றலின் இந்த மாற்றத்தை வினைபடுபொருள்கள் மற்றும் வினைவிளை பொருள்களின் பிணைப்பு ஆற்றல்களிலிருந்து மதிப்பிடலாம்.
உதாரணங்கள்
தொகு- மின்கலங்கள்
- உயிரி
- பெட்ரோலியம்
- இயற்கை எரிவாயு
- நிலக்கரி
- உணவு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chemical energy - Energy Education". energyeducation.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-21.