வேத சாரம்
வேத சாரம் எனப்படுவது இந்து சமயத்தின் அறிவு நூலான வேதம் கூறும் சாரமாகும். அதாவது, எவ்விதமான இடையீடும் இன்றி அனைவரும் உள்ளும் புறமும், பரம்பொருளை அறிந்து களிப்புற வேதமானது எல்லார்க்கும் சொல்கின்றது.
வேதத்தின் சாரங்களாவன:
- அந்தராத்மாவாக விளங்கும் அந்த பரமன் ஒருவனே;
- அந்த ஒருவனை அன்றி வேறில்லை;
- அவன் வானாகி மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி, உயிர்க்கு உயிராய் ஆகி நிறைந்து உள்ளான்;
- உயிர்கள் உள்ளந்தோறும் இடம் கொண்டுள்ளான்;
- அவன் பரிசுத்தன், இன்பமயமானவன், அறிவானவன்;
- தங்கத்தை மாசு மறைத்துக் கொண்டிருப்பது போல அவனது நிஜ சொரூபத்தை நமது மனமாசுக்கள் மறைக்கின்றன.பல்வேறு சுத்த சாதனங்களால் நம் மனமாசைத் துடைத்து, மனத்தை தூய்மையாக்கினால் அவ்விறைவனைக் காணலாம்.
உசாத்துணை நூல்கள்
தொகு- துரை இராஜாராம். (ஜூன் 2000). திருமூலர் வாழ்வும் வாக்கும். :நர்மதா பதிப்பகம். பக்கம் 66.