வேரவில்

இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள இடம்

இட அமைவு தொகு

இலங்கையின் வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவில் இடஅமைவு பெற்றுள்ள பிரதேசமே வேரவில் ஆகும். ஏ முப்பத்தியிரண்டு பிரதான வீதியினூடாக  பல்லவராயன்கட்டுச் சந்திக்கு சென்று அங்கிருந்து சுமார் ஏழு கிலோ மீற்றர்கள் தூரம் பயணம் செய்து இந்தக்கிராமத்தினை அடையலாம். இப்பிரதேசத்தைச் சூழ கிராஞ்சி பொன்னாவெளி வலைப்பாடு போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன.

வரலாறு தொகு

பண்டைய காலம் தொடக்கம் சைவமும் தமிழும் ஒருங்கே வளர்ச்சி பெற்ற இக்கிராமத்தில் இலங்கையின் பூர்வீகக்குடிகளாகிய நாகர்கள் வாழ்ந்ததாகவும் அவர்களது வம்சாவழியினரே பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இக்கிராமத்திற்கு அண்மையில் அமைந்திருந்த பொன்னாவெளி என்னும் சைவக்கிராமத்தில் வசித்துவந்த மக்களும் தற்பொழுது இக்கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

கலாசாரம் தொகு

பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்கின்ற மக்கள் சிவனையும், சக்தியையும், வினாயகரையும் வணங்குகின்ற சைவக்குடிகளாவர். சைவமத ஒழுக்க விழுமியங்களைப்பின்பற்றுகின்ற இக்கிராம மக்கள் அதற்கேற்ப தங்களது வாழ்வியலை ஒழுங்குபடுத்தி வாழ்ந்து வருகின்றனர்.

இங்குள்ள ஆலயங்கள் தொகு

  1. வேரவில் வெள்ளிப்பள்ளத்து வீரகத்தி வினாயகர் ஆலயம்
  2. ஐயனார் ஆலயம்
  3. நாக தம்பிரான் ஆலயம்

கல்வி தொகு

இங்குள்ள மக்கள் கற்றலில் அர்வமுடையவர்களாகவும் அறிஞர்களாகவும் காணப்படுகின்றனர். ஆசிரியர்களாகவும்  அரச அதிகாரிகளாகவும் கடமை புரிந்து வருகின்றனர்.

இங்குவேரவில் இந்துமகா வித்தியாலயம் என்னும் பாடசாலை அமைந்துள்ளது. தரம் ஒன்று தொடக்கம் உயர்தரம் வரையான மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் இப்பாடசாலை ஆரம்பத்தில் மேற்கத்தி உடையார் என்று அழைக்கப்பட்டு வந்த திரு குமாரசாமி உடையாரின் தந்தையினால் காணி  வழங்கப்பட்டு  சிறு கொட்டகையில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக வளர்ச்சி கண்டது. தொடர்ந்து வந்த காலத்தில் பாடசாலையின் விஸ்தரிப்பிற்கு நிலம் போதாமையினால் அரசால் வழங்கப்பட்ட காணியில் தற்பொழுது இப்பாடசாலை இயங்கி வருகின்றது.

பொருளாதாரம் தொகு

இக்கிராம மக்களது பிரதான பொருளாதாரம் விவசாயமாகும் நீர் சேமிப்பிற்கான குளம் ஒன்று இங்கு அமைந்திருந்தாலும் இவர்கள் மழையை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். நெற்பயிர்ச்செய்கை மட்டுமல்லாது வாழை பப்பாசி போன்ற பழப்பயிர்ச் செய்கையிலும் மரக்கறிப்பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டுவருகின்றனர். தவிர ஆ நிரைகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேரவில்&oldid=3755650" இலிருந்து மீள்விக்கப்பட்டது