வேரி மலர்
வேரி மலர் என்பது பழந் தமிழ் நூல்களில் குறிப்பிடப்படும் ஒருவகை மலர். வேரி என்னும் சொல் ஒருவகை மலரையும், தேனையும் குறிக்கும். முற்காலத்தில் மகளிர் வேரி மலரைக் கூந்தலில் சூடிக்கொள்வர். இரு காதுகளிலும் தொங்கவிட்டுக்கொள்வர்.
- மலர்
- மதுரை மகளிர் கார்காலத்தில் சூடும் பூக்களில் ஒன்று ‘செங்கோட்டு வேரிப் பூ மாலை. [1]
- இருந்தையூரில் திருமாலின் படுக்கை பாம்பை வழிபட்டவர்கள் இரு காதுகளிலும் வேரி மலரைத் தொங்கவிட்டிருந்தனர். [2]
- குரவை ஆட ஆய்ச்சியர் 7 பெண்களை நிறுத்தினர். அவர்களில் ஒருத்தி காரிக்காளையை அடக்கியவனைக் காதலித்தவள். அவள் தன் சீவிமுடித்த தன் கூந்தலில் வேரிமலர் சூடியிருந்தாள். [3]
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- வேரி மலர் படம் - பி.எல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டுவது.
அடிக்குறிப்பு
தொகு- ↑ செங்கோட்டு வேரிச் செழும்பூம் பிணையல் – சிலப்பதிகாரம் 14-91,
- ↑ கடிப்புகு வேரிக் கதவம் இல் தோட்டி கடிப்பு இரு காதில் கனங்குழை தொடர - பரிபாடல் திரட்டு 1-32
- ↑ காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ் வேரி மலர்க் கோதையாள். சிலப்பதிகாரம் 17-6-2
- ↑ ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி - புறநானூறு 152-26
- ↑ வேரியும் பாலனார்க்கு ஈக - திணைமாலை 12-1