வேர்ஜில் (Virgil) எனப்படும் பப்ளியஸ் வேர்ஜிலஸ் மாரோ (Publius Vergilius Maro, அக்டோபர் 15, கிமு 70 – செப்டெம்பர் 21, கிமு 19) ஒரு செந்நெறிக்கால ரோமக் கவிஞர் ஆவார். இவர் வடக்கு இத்தாலியில், மன்ட்வா அருகில்,  அன்டிஸ்  என்னும் இடத்தில் பிறந்தார். இவர் எழுதிய முக்கியமான ஆக்கங்கள், புகோலிக்ஸ் , ஜோர்ஜிக்ஸ், அனீட் என்பன. அவை தவிரப் பல சிறு கவிதை ஆக்கங்களையும் இவர் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு விவசாயியின் மகனான வேர்ஜில், ரோமின் மிகப் பெரிய கவிஞர்களுள் ஒருவர் என்ற நிலையை எட்டியதுடன், இவரது ஆனீட் என்னும் ஆக்கம் உரோமின் தேசிய இதிகாசமாகவும் போற்றப்பட்டது.

வேர்ஜில்
வெர்ஜில், கிபி 3-ஆம் நூற்றாண்டு சிற்பம்
வெர்ஜில், கிபி 3-ஆம் நூற்றாண்டு சிற்பம்
பிறப்புபப்ளியசு வெர்ஜிலியசு மாரோ
அக்டோபர் 15, கிமு 70
வெர்ஜிலியோ,[1] உரோமைக் குடியரசு
இறப்புசெப்டம்பர் 21, கிமு 19 (அகவை 50)
புருண்டிசியம், இத்தாலி, உரோமைப் பேரரசு
தொழில்கவிஞர்
தேசியம்உரோமர்
வகைஇதிகாசம், அறிவுறுத்தும் பாடல்கள், மேய்ப்பர்களின் கவிதை
இலக்கிய இயக்கம்அகஸ்தான் பாடல்கள்

மேற்கோள்கள் தொகு

  1. Oxford Dictionary of the Classical World, ed. Roberts, John, (Oxford: OUP, 2005)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேர்ஜில்&oldid=3880417" இலிருந்து மீள்விக்கப்பட்டது