வேர்நுனி மூடி
வேர்நுனி மூடி (Root cap) என்பது வேர்களின் முனைகளில் அமைந்துள்ள தொப்பி போன்ற திசுக்களின் பகுதியாகும்[1]. கேலிப்ட்ரா என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. சிடாடோசைட்டுகள் எனப்படும் செல்கள் வேர்நுனி மூடியில் காணப்படுகின்றன. இவை தாவரங்களின் புவியீர்ப்பு தூண்டுதல்களுக்க்கு ஏற்ப துலங்குவதில் பங்கேற்கின்றன[1]. வேர்நுனி மூடி கவனமாக அகற்றப்பட்டால் வேர் மண்ணுக்குள் புகும்போது எளிதில் ஒடிந்துவிடக்கூடும். வேர்களின் நுனிப்பகுதியை சேதமடையாமல் பாதுகாக்கும் பணியை வேர்நுனி மூடி செய்கிறது[1]. மேலும் பிசினைச் சுரந்து வேர்கள் எளிதாக மண்ணுக்குள் புகுவதற்கும்[1], மண்ணின் நுண்ணுயிர்தொகுதியுடன் தொடர்பு கொள்ளவும் இவை உதவுகின்றன[1].
கீழ்நோக்கிய வேரின் வளர்ச்சியைத் தூண்டுவது வேர்நுனி மூடி அமைந்திருப்பதன் நோக்கமாகும். வேர்களின் நுனிப்பகுதியிலுள்ள திசுப்பகுதியைப் சேதமடையாமல் மூடிப் பாதுகாப்பது இதன் பனியாகும்[2]. மேலும் புவியீர்ப்பு விசையின் தூண்டல்களுக்கு ஏற்ப செயல்படுவதற்கும் இது காரணமாகிறது[3].
சில ஒட்டுண்ணித் தாவர வேர்களிலும்[4]:138, நீர்வாழ்த் தாவரங்களிலும் வேர்நுனி மூடி அமைப்பு காணப்படுவதில்லை. இவ்வகை தாவரங்களில் வேர்நுனி மூடிக்குப் பதிலாக பை போன்ற அமைப்பில் வேர் பைகள் காணப்படுகின்றன[5]:2–76.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Raven, J.A.; Edwards, D. (2001). "Roots: evolutionary origins and biogeochemical significance". Journal of Experimental Botany 52 (90001): 381–401. doi:10.1093/jexbot/52.suppl_1.381. பப்மெட்:11326045.
- ↑ Burgess, Jeremy (1985-05-16). Introduction to Plant Cell Development (in ஆங்கிலம்). CUP Archive. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521316118.
- ↑ Kuya, Noriyuki; Sato, Seiichi (2011). "The relationship between profiles of plagiogravitropism and morphometry of columella cells during the development of lateral roots of Vigna angularis". Advances in Space Research 47. http://www.sciencedirect.com.proxy.lib.umich.edu/science/article/pii/S0273117710006101.
- ↑ Jeffrey, Edward Charles (2007). The Anatomy of Woody Plants. Pomeroy, Ohio: Carpenter Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4067-1634-0.
- ↑ Gupta, P.K. (2007). Genetics: Classical to Modern. Rastogi Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-1713-3896-2.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help)