வேற்றுமை அணி
வேற்றுமை அணி என்பது இரு பொருள்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைக் கூறி, பின் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது ஆகும்.
எடுத்துக்காட்டு
தொகு'அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து தேய்வர் ஒரு மாசுறின்'
இச்செய்யுளில் சான்றோருக்கும் திங்களுக்கும் முதலில் ஒற்றுமை கூறிப் பின்னர் வேற்றுமைப் படுத்தியுள்ளது...
எடுத்துக்காட்டு
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
பொருள்: தீயினால் சுட்ட புண்ணால் உடலில் வடு உண்டானாலும் உள்ளே ஆறிவிடும்; நாவினால் சுட்ட புண்ணால் உடலின் புறத்தே வடு உண்டாகாவிட்டாலும் உள்ளே ஆறாது.
அணி: வேற்றுமை அணி