வேலரி கவுர்

வேலரி கவுர் (Valarie Kaur) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆவணப் படங்கள் உருவாக்குனர், மனித உரிமைச் செயற் பாட்டாளர், வழக்கறிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார். மத நல்லிணக்கம்,மற்றும் பல்வேறு இனங்களிடையே அமைதி நிலவ பரப்புரை செய்து வருகிறார்.[1]

கல்வியும் பட்டமும் தொகு

கலிபோர்னியா குலோவிஸ் என்ற ஊரில் வாழ்ந்து வரும் சீக்கியப் பெண்மணியான வேலரி கவுர் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்துப் பன்னாட்டு உறவுகள் என்ற படிப்பில் பட்டம் பெற்றார். பின்னர் ஆர்வர்டு டிவினிட்டி பள்ளியில் படித்து இறையியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். யேல் சட்டப் பள்ளியில் சட்டம் படித்தார்.

செயல்கள் தொகு

அமெரிக்காவில் சீக்கியர்கள் மீதும் இசுலாமியர்கள் மீதும் நிகழ்த்தப்படுகிற வன்முறைக் கொடுமைகள் மற்றும் குற்றச்செயல்கள் போன்றவற்றைக் கண்டித்தும் எதிராகவும் செயல்பட்டு வருகிறார். 'பிளவுபட்டால் வீழ்ந்துபடுவோம்' என்னும் ஓர் ஆவணப் படம் உருவாக்கினார். அப்படம் 200 நகரங்களில் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகளும் கிடைத்தன.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலரி_கவுர்&oldid=2718444" இலிருந்து மீள்விக்கப்பட்டது