வேலைக்காரி அந்துப்பூச்சி
பூச்சி இனம்
வேலைக்காரி அந்துப்பூச்சி (Amata passalis) என்பது விட்டில்பூச்சி இன, எபெபீட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சி ஆகும். இது இலங்கை, இந்தியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது.[1]
வேலைக்காரி அந்துப்பூச்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Amata |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/AmataA. passalis
|
இருசொற் பெயரீடு | |
Amata passalis (Fabricius, 1781) | |
வேறு பெயர்கள் | |
|
விளக்கம்
தொகுஇவை 3.5 செ.மீ. நீளம் கொண்டவை. இவை நேராக இல்லாமல் குறுக்குமறுக்காகப் பறக்கக்கூடியன. பகலில் இரவு ஆகிய இருசமயங்களிலும் நடமாடக்கூடியன. செங்குத்தான பகுதிகளில் இறக்கைகளை விரித்துவைத்தே உட்காரக்கூடியன. பொதுவாக அந்திப்பூச்சிகள் வண்ணத்துப்பூச்சிகளை ஒத்த இறக்கை வடிவத்தையே பெற்றிருக்கும். ஆனால் இந்த அந்திப்பூச்சி பார்ப்பதற்குக் குளவியைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவே இப்படிப்பட்ட உடல் தகவமைப்பைப் இவை பெற்றுள்ளன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Amata at funet
- ↑ ஆதி வள்ளியப்பன் (30 திசம்பர் 2017). "குளவி போன்றொரு பூச்சி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2017.