வேலைத்துணுக்குப் பொருளாதாரம்
வேலைத்துணுக்குப் பொருளாதாரம் (gig economy) என்பது முழுநேர வேலைகளுக்குப் பதிலாக குறிப்பிட்ட வேலைத்துணுக்குகளைச் செய்துமுடிக்கும்படியான குறுகிய கால வேலை ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது வேலைத்துணுக்குப் பொருளாதாரத்தை சாத்தியப்படுத்தியுள்ள முக்கியமான காரணிகளில் ஒன்று.
இது தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்கும்; புதுமையாக்கத்தைக் கட்டற்றுப் பெருகச்செய்யும் என்றெல்லாம் ஒரு சாராரும், இது தொழிலாளர் தங்கள் தற்சார்பையும், உரிமைகளையும் இழந்து அடுத்த துண்டு வேலையைத் தேடியலையும் நிலைக்கு ஆளாக்கிவிடும் என்று ஒரு சாராரும் கருதுகின்றனர். அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த விவாதப் பொருளாக வேலைத்துணுக்குப் பொருளாதாரம் உருவெடுத்திருக்கிறது.
வெளி இணைப்புகள்
தொகு- 'தி கார்டியன்' தளத்தில் அருண் சுந்தரராஜனின் கட்டுரை
- 'அப்படியொன்றும் பெரிய புரட்சியெல்லாம் நடந்துவிடவில்லை' எனச் சொல்லும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரை
- 'வேலைத்துணுக்குப் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது' எனச் சொல்லும் வயர்டு.காம் கட்டுரை
- 'வேலைத்துணுக்குப் பொருளாதாரத்தின்' கெடுவிளைவுகளைச் சொல்லும் 'ஃபார்ச்சூன்' இதழ் கட்டுரை