வேலையற்ற மீட்சி

வேலையற்ற மீட்சி (jobless recovery) அல்லது வேலையற்ற வளர்ச்சி (jobless growth) எனும் பொருளாதாரவியல் தோற்றப்பாடு பொருளாதாரவியல் வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் வேலைவாய்ப்புகள் குறைவதைக் குறிக்கிறது. இப்பொருள் தரும் ஆங்கிலச் சொல் முதன் முதலில் நியூயார்க் டைம்சு நாளிதழில் 1930களில் பயன்படுத்தப்பட்டது.

காரணங்கள்

தொகு

சிலர் தானியங்கிகளின் வரவால் உற்பத்தி அதிகரித்து மனித உழைப்பின் தேவை குறைந்தது என்று கருதுகின்றனர். சிலரோ தொழிலாளர் சந்தையில் ஏற்படும் அமைப்பு ரீதியிலான மாறுதல்களே இதற்குக் காரணமென வாதிடுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலையற்ற_மீட்சி&oldid=3409416" இலிருந்து மீள்விக்கப்பட்டது