வேல்ட் பைல்

வேல்ட் பைல் என்பது எழுத்துக்களால் ஆன புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் பாவிக்கப்படும் ஸ்கான் பண்ணப்பட்ட தேசப்படங்களைக் கணினியில் பாவிப்பதற்கென எஸ்றியினால் (ESRI) இனால் உருவாக்கப்பட்ட ஓர் கோப்பு முறையாகும்.

பொதுவாக நீங்கள் ஸ்கான் பண்ணிய தேசப்படம்த்தின் கோப்பு நீட்சியானது *.tif என இருக்குமானால் வேல்பைலானது *tifw என்றவாறு இருக்கும். *.jpg என்றவாறு கோப்பின் பெயரானது இருக்குமானால் அதன் வேல்ட்பைல் ஆனது *.jpgw ஆகும் எடுத்துக்காட்டாக new_sheet01_manipay.jpg என்பது கோப்பின் பெயர் என்றால் வேல்ட் பைல் new_sheet01_manipay.jpgw என்றவாறு அமையும்.

இதன் சிறியதோர்மாறுபாடாக பழைய மென்பொருட்களை ஆதரிக்கும் வகையில் *.tif கோப்புக்களுக்கு *.tfw உம் *.jpg இற்கு *.jpw உம் பாவிக்கப்படுகின்றது. பொதுவாக ஆர்க்வியூ ஆர்க்ஜிஐஎஸ் மென்பொருட்கள் இவற்றைப் புத்திசாலித்தனமாகக் கண்டுபிடித்து சரியான முறையில் கணினிகளில் காட்டப்பயன்படும்.

Line 1: A, ஒரு பிக்ஸலின் அளவு பட அளவுத்திட்டத்தில்
Line 2: D: y அச்சூடான சுழற்சி
Line 3: B: x அச்சூட்டான் சுழற்சி
Line 4: E: y அச்சில் பட அளவுத்திட்டத்தில் ஒரு பிக்ஸலின் அளவு 
Line 5: C: இடதுபக்க மேல் மூலையின் x ஆள்கூறு
Line 6: F: இடதுபக்க மேல் மூலையின் y ஆள்கூறு

பொதுவாக E ஓர் மறையெண்ணாகும் (negative) ஏனெனில் தேசப்படங்கள் பொதுவாக இடது கீழ்மூலையில் காட்டீசியன் முறையில் ஆள்கூறுகள் குறிப்பிடப்படுவதோடு வேல்ட் பைலில் இடது மேல் மூலையின் ஆள்கூறுகளையே தந்துள்தாகும். உங்கள் தேசப்படம் தலைகீழாகத் தோற்றமளித்தால் E இன் பெறுமதியை மறையாக்கவேண்டும்.

எடுத்துக்காட்டாக new_sheet01_manipay.jpgw கோப்பில்

4
0
0
-4
80002
524998
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேல்ட்_பைல்&oldid=2740790" இலிருந்து மீள்விக்கப்பட்டது